திங்கள், 22 டிசம்பர், 2014

அல்சர் ulcer controversy


நேரத்திற்குச் சாப்பிட்டால்தான் அல்சர் வரும்!

நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் 

என்று உங்களுக்கு இத்தனை நாளும் 

போதிக்கப்பட்டுள்ளது. அல்சர் 

பெரும்பாலும் நேரா நேரத்திற்குக் கடிகாரத்தைப் 

பார்த்துச் சாப்பிடுபவர்களுக்கே வருகிறது 

என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.



ஒரு பாத்திரத்தில் தயிர் சாதமோ அல்லது 

சாம்பார் சாதமோ எடுத்து வைத்து ஒரு பத்து 

பதினைந்து நாட்கள் கழித்துப் பாருங்கள். 

இப்போது அந்தச் சாதம் கெட்டுப்போய் நாற்றம் 

எடுக்கும். சில சமயம் புழுக்கள்கூட 

வந்திருக்கலாம். மீண்டும் அந்தப் பாத்திரதை 

மூடி அப்படியே வைத்து விடுங்கள். மறுபடியும் 

ஒரு பத்து பதினைந்து நாட்கள் கழித்துப் 

பாருங்கள். அந்தக் கெட்டுப்போன சாதம் 

விஷமாக மாறி, அந்தப் பாத்திரத்தைப் பாதித்து 

ஓட்டை போட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம் 

(இதை வீட்டிலேயே சோதித்துப் பாருங்கள்).


இப்போது அல்சர் எப்படி வந்தது என்று 

உங்களால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும். 

நீங்கள் நினைப்பது போல் நேரத்திற்குச் 

சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்பதெல்லாம் 

பொய். பசிக்காமல் நேரத்திற்குச் 

சாப்பிடும்போதுதான் அல்சரே வருகிறது.


பசித்துச் சாப்பிடும் போதுதான் வயிற்றில் ஜீரண 

நீர்கள் சுரக்கின்றன. வயிற்றில் நேரத்திற்கு 

அலாரம் வைத்துக்கொண்டு ஜீரண நீர்கள் 

சுரப்பதில்லை. அந்தந்த ரேத்திற்கு வருவதற்கு 

இது ஒன்றும் பேருந்தோ, ரயிலோ அல்ல. 

என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா, நேரா 

நேரத்திற்குச் சுரப்பதற்கு அங்கு எந்த விதமான 

ஏற்பாடும் கிடையாது. மனித உடலானது 

முற்றிலும் உணர்வுகளால் ஆனது. உணர்வுகளே 

மனித உடலை வேலை செய்யத் 

தூண்டுகின்றன, 


வேலையை முடிக்கவும் தூண்டுகின்றன. 

செயல்படுத்தவும் வைக்கின்றன. நேரத்திற்கு 

ஜீரண நீர் சுரந்து விடும். அப்போது வயிற்றில் 

சாப்பாடு இல்லையென்னறால் அல்சர் புண் 

வந்துவிடும் என்பது போன்ற காமெடி வேறு 

எதுவும் இல்லை.


நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் 

வருகிறதென்றால், இந்தியாவில் 

பெரும்பாலான 


ஏழை மக்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் 


அல்சர் வந்திருக்க வேண்டுமே! பெரும்பாலும் 

அல்சர் வருவது மூன்று வேளையும் நன்கு 

சாப்பிடுபவர்களுக்கே என்பதைக் கவனியுங்கள்.


நீங்கள் பசிக்காமல் மூன்று வேலையும் 

சாப்பிடும் போது, ஜீரண நீர்கள் சுரக்காத 

நிலையில் வயிற்றில் இருக்கும் உணவு 

அங்கேயே தங்கி, புளித்து, கெட்டு, கெட்ட 


வாயுக்கள் உருவாகத் துணை புரிகிறது. 

தினம்தோறும் இதுபோன்ற செயல் தொடர்ந்து 


நடைபெறும்போது, கெட்டுப் போன உணவு 
விஷமாக மாறுகிறது. பாத்திரத்தில் வைத்த 
உணவு எப்படி விஷமாக மாறுகிறதோ.... அப்படி 
விஷமாக மாறிய உணவு, உங்கள் வயிற்றில் 
அல்சரை (புண்களை) உருவாக்குகிறது என்பதை 
உணர்ந்துகொள்ளுங்கள்.

ஜீரணம் கெட்டால்தான் அல்சர் வருமே ஒழிய, 

ஜீரணிப்பதற்கு அங்கு ஒன்றுமே இல்லாத போது 

அல்சர் வராது. சாப்பிடாமல் இருந்தால் உடல் 

சோர்வடைந்து, சத்துக் குறைபாடு ஏற்பட்டு, அது 

சம்பந்தமாக நோய்கள் வேண்டுமானால் 

வரலாம்.

அல்சர் வயிற்றில் மட்டுமல்லாமல், உடலின் 

எந்தப் பாகத்தில் வேண்டுமானாலும் 

தோன்றலாம். நாட்பட்டு வெளியேற முடியாமல் 

தேங்கும் கழிவுகள் அந்த இடத்தில் பாதிப்பை 

ஏற்படுத்துகின்றன. பாதிக்கப்பட்ட அந்த 

இடத்தில் புண்கள் உருவாகின்றன. அதையே 

அல்சர் என்கிறோம். அல்சர் என்ற புண்கள் 

குணமாக வேண்டுமானால், தேங்கியுள்ள் 

கழிவுகளை முதலில் வெளியேற்ற வேண்டும். 

கழிவுகள் வெளியேறாவிட்டால் மீண்டும் 

மீண்டும் அல்சர் வந்துகொண்டே தான் இருக்கும்.


அல்சர் வந்துவிட்டால் உங்கள் உடலில் 
கழிவுகளின் தேக்கம் நிறைய உள்ளது என்பதை 
அறிந்துகொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக