ஞாயிறு, 28 டிசம்பர், 2014

ஆரோக்கியத்துக்கு 6 பழக்கங்கள்


ஆரோக்கியத்துக்கு 6 பழக்கங்கள்!
ஆரோக்கியத்துக்கு 6 பழக்கங்களை பட்டியலிடுகிறார் சென்னையைச் சேர்ந்த இயற்கை மருத்துவர் கீர்த்தனா. அவை.....
1. மனதை லேசாக்குங்கள்

மனதைப் பொறுத்துதான் நோய்களின் வீரியம் அதிகரிப்பதும் குறைவதும். மனதை ஆரோக்கியமாக மாற்றும் வித்தையைத் தெரிந்து கொண்டால் நோயை எளிதில் குணப்படுத்தி விடலாம். உடல் உறுப்புகளை வலிமை படுத்தினால் உணர்வுகள் சரியாகிவிடும்.
புத்துணர்வும் கிடைக்கும். ஹெல்தி உணவு, சுவாசம், தோற்ற அமைப்பு (posture) போன்றவை சரியாக இருந்தால் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்துவிடும். மனம் ஆரோக்கியம் பெற அமைதியான சூழல், அளவான, ஆழ்ந்த தூக்கம் அவசியம்.
2. தியானம் பழகுங்கள்
பிரபஞ்சத்திலிருந்து நேரடியான ஆற்றலை ஈர்க்கும் சக்தி தியானத்துக்கு உண்டு. இது நம் உடல் மற்றும் மனதை மேம்படுத்தும். தியானம் செய்யத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. பிறப்பு முதல் இறப்பு வரை நம்முடனே எந்நேரமும் இருக்கும் சுவாசத்தைக் கவனிக் கலாம். காலை வேளையில் அடிவயிற்றிலிருந்து வெளிவரும் மூச்சுச் செல்லும் பாதையைக் கவனிக்கலாம். நாளடைவில் எண்ண ஓட்டங் கள் குறைந்து மூச்சை கவனிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். இதுவே தியானம் செய்த பலனை கொடுத்துவிடும்.
3. உணவுக்கு மதிப்பளியுங்கள்
உண்ணும் உணவுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். டிவி பார்த்துக் கொண்டே என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது தெரியாமலேயே சாப்பிடுவது சரியான முறையல்ல.
தரையில் உட்கார்ந்து உணவை ரசித்து ருசித்து மென்று சாப்பிட தொடங்கினால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமக்குப் பலத்தைத் தரும்.
உண்ணும் போது கறிவேப்பிலை, மிளகு, தக்காளி போன்றவற்றைத் தூக்கி எரிந்துவிட்டு சாப்பிடுவது சரியான உணவுப் பழக்கம் அல்ல. தூக்கி எறிவதற்காக எந்தப் பொருளும் சமையலில் சேர்ப்பது கிடையாது. அனைத்தையும் சாப்பிடவே உணவு சமைக்கப்படுகிறது.
4. தன்னை நேசிக்கத் தொடங்குங்கள்
நம்மை நாமே விரும்புவதும், அக்கறையோடு நேசிக்கவும் தொடங்குங்கள். மற்றவர்களிடம் அன்பு செலுத் தி அரவணைப்பது போலத் தங்களின் மேல் அக்கறை கொண்டு சரிவரப் பராமரித்துக் கொள்வதும் நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவியாகும். உடலும் மனமும் மகிழ்ச்சி அடையும். மன அழுத்தம், மன சோர் வுக்கான தீர்வு வெளியில் அல்ல நம்மிடமே இருக்கிறது. உடலுக்குத் தரும் முக்கியத்துவத்தை மனதுக்கும் தந்து அதற்கு என்ன தேவை என்பதைப் புரிந்து கொண்டு பூர்த்தி செய்யுங்கள்.
5. உடலுழைப்பை உருவாக்குங்கள்
உடலுழைப்பு சார்ந்த வேலை இன்று பலருக்கும் இல்லை. ஆதலால், உட லுழைப்பை நாமே உருவாக்கலாம்.
காலை, மாலை உடற்பயிற்சி செய்வது, கீழே உட்கார்ந்து சாப்பிடுவது, அருகில் இருக்கும் கடைக்கு நடந்து செல்லுவது, வீட்டுப் படிகளில் ஏறி இறங்குவது, வீட்டை சுத்தப்படுத்துவதில் மெஷின்களைப் பயன்படுத்தாமல் இருப்பது, உடலுழைப்புக்கு என விடுமுறை நாட்களை ஒதுக்கி வைப்பது என உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடலாம்.
6. உணவுப் பழக்கத்தைச் சீராக்குங்கள்
காலை உணவை தவிர்த்தல், ஒரு வேளை தானே என்று துரித உணவுகளைச் சாப்பிடுதல், ஆரோக்கியத்தைப் புறந்தள்ளிவிட்டு, சுவைக்கு அடிமையாதல், அடிக்கடி விரதம் இருத்தல், சுகாதாரமற்ற உணவை உட் கொள் ளுதல் போன்ற பழக்கங்களைத் தவிர்க்கலாம்.
பசித்த பிறகு சாப்பிடும் பழக்கத்தைத் தொடங்கலாம். அனைத்து உணவுகளையும் அளவாக எடுத்துக் கொள்வது நல்லது. எப்போதும் டிரீட், பார்ட்டி போன்றவற்றை மதிய வேளையில் வைத்துக் கொள்ளுங்கள். இரவில், டின்னர் பார்ட்டியை தவிருங்கள்.

சனி, 27 டிசம்பர், 2014

6 வகை மாரடைப்பு – சிகிச்சை முறை


அதிரவைக்கும் ஆறு வகையான மாரடைப்புகளும் – அவற்றிற்கான சிகிச்சை முறைகளும்!
மாரடைப்பா…
இல்லையா என்ப தை ஐந்தே நிமிடத்தில் கண்டு பிடித்துவிடலாம். இதை உடனடி யாக கவனிக்காவிட்டால் இதயத் தின் திசுக்களை செயலிழக்க செய்து, இதயத்தின் பம்ப் செய்வது பாதிக்கப்பட்டு, மார்பு வலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என் று அடுத்தடுத்து தொடர்ந்து,
கடைசியில் திடீர் மரணம் சம் பவித்துவிடும். உலகஇதயகுழு , ஐரோப்பிய இதயக் கழகம், அமெரிக்க இதயக் கழகம், அ மெரிக்க ஹார்ட் சங்கம் இந் த நான்கும் சேர்ந்து, உலக ஆய்வு கூட்டமைப்பு அமைத்து, மார டைப்பின் வகைகளை வகுத்து ள்ளன.
கோல்டன் அவர் – Golden Hour
முதல் 2 மணி நேரம் “கோல்டன் அவர்’ என்று அழைக்கப் படுகிறது. கரோனரி ரத்தக்குழாயில் முழு அடைப்புக்கு காரணமான ரத்தக் கட் டியை 2 மணி நேரத்தில் கரைக் கவேண்டும். இல்லையேல் அந்த ரத்த நாளம் ரத்தம் செலுத்தும் இதயத்தசைகள் அழிந்து (நெக் ரோசில்) இதயத்தின் ரத்தத்தைச் செலுத்தும் திறன் இஜச்சன் பிரா க்ஸன் (இ.எப்) குறைந்து, மூச்சு திணறல், படபடப்பு, ரத்த அழுத்தம் குறைதல், பலவித சிக்கலை ஏற் படுத்தி மரணத்தை ஏற்படுத்தும். அதனால், தான் நேரம் விரயமா காமல் 2 மணி நேரத்தில் சிகிச் சையைத் தொடங்கி இதயத்தை காப்பாற்ற வேண்டும். இதை முத ன்மை பலூன் சிகிச்சை என்று கூறுகிறோம்.
ஆறு வகை மாரடைப்பு
மாரடைப்புகள் மொத்தம் ஆறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது;
முதல் வகை மாரடைப்பு
முதல் வகை, மாரடைப்பு ரத்த நாளத்தில் கெட்ட கொழுப்பினால் அடைப்பு ஏற்பட்டு, இறுதி கட்ட த்தில் ரத்தம் உறைந்து முழு அடைப்பு ஏற்படுவ து. இதனால், இ.சி.ஜி.யில் மாற்றம் ஏற்படுகிறது. இதை ஸ்டெமி மாரடைப்பு என்று அழைக்கின்ற னர்; இதை உறுதி செய்ய டிரோப்டி டெஸ்ட், செய்ய வே ண்டும். அருகில் உள்ள மூன்றாம் நிலை மருத்துவ மனையாக இருந்தாலும், 2 மணி நேரத் திற்குள் ஆஞ் சியோகிராம், பிளாஸ்டி ஸ்டென்ட், பைபாஸ் செய்ய வேண்டும். மாரடைப்புக் காரண மான ரத்தக்கட்டியை கரைக்க பல்வேறு ஊசி களை போடுவதுண்டு. கட்டியை கரைத் தவுடன் மீதியுள்ள அடைப்பை பலூன் ஸ்டென்ட் வைத்து குணப்படுத்த வேண் டும்.
இரண்டாவது வகை
இந்த இரண்டாவது வகை மாரடைப்பு க்கு காரணம் வேறு விதமானது; இதயத்தசை களுக்கு பிராண வாயுத்தேவை. அதற்கு ஈடு கொடு த்து சமமாக பிராண வாயுவை கொடுக்க வேண்டிய சம நிலையில் வேறு பட்டால், குறை ஏற்பட்டு முழு அளவு தடை ப்பட்டால் மாரடை ப்பு மரணம் ஏற்படு ம். ரத்தம் தடைபட்டால் ரத்தம் உறைந்து விடு ம். இந்தவகை மாரடைப்பு மரணம், இளம் வயதினருக்கும் வரும்; ஆஞ்சியோகிராம் செ ய்து பார்த்தால், கரோனரி ரத்தக்கு ழாய்கள் அடைப்பு இன்றி இருக்கும். நடுத்தர இளம் பெண்களுக்கு சாதாரணமாக வரும்.
மூன்றாவது வகை
நீண்ட நேரம் ரத்த நாளம் சுருங்கினால், ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பட்டு அதன் மூலம் மாரடைப்பு உண்டாவது தான் இந்த வகை.
நான்காவது வகை
மாரடைப்பு வந்த பின், பலூன் ஸ்டென்ட் சிகிச்சை செய்யும் போது ஸ்டென்டில் ரத்தம் உறைந்து அடை ப்பு ஏற்படும் இது, இன்ஸ்டென்ட் அ டைப்பு எனப்படும். அதனால் வரும் மாரடைப்பு மூலம், விளைவுகளை ஏற்படுத்தும். நல்ல மருந்துகளால், இதை உடனடியாக தடுத்து விடலா ம். கேத்லேப்பில் நல்ல உயிர்காக் கும் வசதிகளும் உள்ளன.
ஐந்தாவது வகை
ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும்போது அதைச் சரிப்படுத்தி, ரத்த ஓட்டத்தைச் சீராக்க உருவாக்கப்ப ட்டதுதான் ஸ்டென்ட். இது உலோ கத்தால்ஆன வலைபோன்ற அமை ப்பைக்கொண்டது.
ர‌த்தக் குழாய் வழியே சிறிய கம்பி போன்ற கருவியைச் செலுத்தி, இ தயத்தில் ஏற்படும் அடைப்பு உள்ளி ட்ட பிரச்னைக ளுக்குத் தீர்வு அளிக்கும் ‘இன்டர்வென்ஷனல் கார்டி யாலஜி’ துறையில், கரையக்கூடி ய (Bioabsorbable Stent) ஸ்டென் ட்களின் வருகை ஒரு புதிய புரட்சி. இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் இந்த ஸ்டென்டைப் பயன்படுத்தி அறுவைசிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது.
சென்னையின் மூத்த இன்டர்வென்ஷனல் இதய நோய் சிகிச்சை நிபுணர் செங்கோட்டுவேலு தெரிவிப்ப தாவது; ‘இதயத் திசுக்களுக்குச் செல்லு ம் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும் போது, மாரடைப்பு வருகிறது. ரத்தக் குழாயில் கொழுப்புப் படிவது, ரத்தம் உறைவது உள்ளிட்ட காரணங்களால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.
இந்த ரத்தக் குழாய்களைச் சரிசெய்யும் வகையில், 1977-ல் பலூன் ஆஞ்ஜியோபிளாஸ்டி முறை வந்த து. இந்த சிகிச்சையின் போது, தொ டையில் உள்ள ரத்த நாளத்தில் சிறி ய துளையிட்டு அதன் வழியே கம்பி போன்ற கருவி ஒன்றை அனுப்பி, அடைப்பு உள்ள இடத்தில்பலூன் போன்ற அமைப்பு ஒன்றை வீங்கச் செய்து அடைப்பு சரிசெய்யப் பட்டது. 1988-ம் ஆண்டில், இதயத் திசுக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத் தாத உலோகத்தால் ஆன வலை போன்ற அமைப்பை உள்ளே செலுத்தி, குறிப்பிட்ட இடத்தை பலூன் துணையுடன் விரிவாக்கும் தொழில்நுட்பம் அறிமுகம் ஆனது. வலை அமைப்பு விரிவாக்கப்பட்ட தும் பலூன் சிறிதாக்கப்பட்டு வெளி யே எடுக்கப்பட்டுவிடும். இதனால், ரத்தம் செல்வதில் இருந்த தடை சரிசெய்யப்படும். இந்த உலோகத்தி ல் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே வந்தன. இதன் அடுத்தக் கட்டமாக, 2002ம் ஆண்டில், மருந் து தடவப்பட்ட ஸ்டென்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் அந்த இடத்தில் மீண்டும் அடைப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட்டது தற்போது முதன்முறையாக உலோக ஸ் டென்ட்டுக்கு மாற்றாக, இதயத் திசுவோடு திசுவாகக் கலந்துவி டும் ஸ்கேஃபோல்டு என்கிற புதி ய ஸ்டென்ட் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
பொதுவாக உலோக ஸ்டென்ட் என்பது கூண்டு போன்ற நிரந்தர அமைப்பு. நம்முடைய இதயத்தில் அது எப்போதும் இருக்கும். இந்த ஸ்டென்ட்டைப் பயன்படுத்தும் போது, அந்த இடத்தில் ரத்தம் உறைய வாய்ப்பு உள்ளது. இதனால் ரத்தம் கட்டியாவ தைத் தடுக்க, பல ஆண்டுக ளுக்கு மாத்திரை எடுத்துக் கொள்ளப் பரிந்துரைப்போம். புதிய கரையக் கூடிய இதய ஸ்டென்ட் தற்காலிகமானது. ரத்தக் குழாய் தன்னுடைய இயல்பு நிலைக்குத் திரும்பும் வரையி ல்தான் இது இருக்கும். இதன் பிறகு 12 முதல் 24 மாதங்களில் இந்த ஸ்டென்ட் இதயத் திசுவோடு திசுவா கக் கலந்துவிடும். இதனால், இந்த புதிய ஸ்டென்ட் பயன்படுத்துவதன் மூலம் 6 மாதங்களிலேயே மாத்திரை எடுத்துக்கொள்ளும் அளவைக் குறைத்துவிடலாம்.
ரத்தக் குழாயானது சுருங்கி விரியும் தன்மைகொண்டது. அப்படி சுருங்கி விரியும்போதுதான் அது ஆரோக்கிய மாக இருக்கும். பழைய ஸ்டென்ட் நிரந்தர அமைப்பு என்பதால், ரத்தக் குழாயின் தன்மை பாதிக்க ப்பட்டது. ஆனால், புதிய ஸ்டென்ட் ரத்தக் குழாயின் இயற்கையானத் தன்மையைப் பாதுகாக்கிறது. மே லும், எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன் பரி சோதனைகள் செய்து சிகிச்சை அ ளிக்க முடியும் என்பது இந்த ஸ் டென்ட்டின் மற்றொரு சிறப்பம்ச ம்” என்கிறார் ஆர்வமும் நம்பிக் கையுமாக.
ஸ்டென்ட் சிகிச்சைக்கு பிறகு அந் த ஸ்டென்ட் என்ன வகை எப்படிப்பட்டது போன்ற முக்கிய குறிப்புக ளை நன்கு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி தெரிந்து கொண்டு, கண்ணும் கருத்து மாக பாதுகாத்து வர வேண்டு ம். அதாவது ஸ்டென்ட் வைத் த டாக்டர் அல்லது ஸ்டென் டைப் பற்றி நல்ல தெளிவாக வும் தெரிந்த ஊருடுவல் நிபு ணரிடம் ஆலோசனைப் பெற் று, ஸ்டென்டின் இன்றைய நி லை. அதில், கொழுப்பு படிந் துள்ளது என்ற விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
ஸ்டென்ட் மூடி மாரடைப்பு வராமல் தடுக்க நிபுணரின் கண்காணி ப்பில் பரிசோதனைகள் செய் து காத்துக் கொள்ள வேண் டும். ஸ்டென்ட் சிகிச்சை செ ய்து, இருபது ஆண்டுகள் என் னிடம் மருத்துவம் பார்த்து நலமாக உள்ளவரும் உண்டு . இரண்டு ஆண்டுகளில் ஸ் டென்ட் மூடி மாரடைப்புடன் வந்தவரும் உண்டு. முதலா மவர் நல்ல வாழ்க்கை முறையை கடைபிடிப்பவர்; இரண்டாமவர், தான் தோன் றிய முறையில் வாழ்பவர்; ஸ்டென்ட் முழுவதும் மூடி னால் மாரடைப்பு, மூச்சு இரைப்பு, படபடப்பு, இனம் தெரியாத அசதி, இது வராம ல் தடுக்க பல கட்டங்களில் பரிசோதனைகள் செய்துக் கொள்ள வேண்டும்.
ஆறாவது வகை- பைபாஸ் சர்ஜரி
பைபாஸ் சர்ஜரி என்பது இதய ரத்தக்குழாய் முழுவதும் அடைபடுவ தால் உண்டாகக்கூடிய மாரடைப் பு நோய்க்கு செய்யக்கூடிய இதய ஆபரேஷன். இந்த ஆபரேஷனை திறந்த முறை இதய ஆபரேஷன் மூலம், செயற்கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோ கப்படுத்தி இதய துடிப்பை நிறுத்தி யும் ஆபரேஷன் செய்யலாம். இதய த்துடிப்பை நிறுத்தாமலும், செயற் கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோகிக்காமலும் ஆபரேஷன் செய்யலாம்.
பைபாஸ்சர்ஜரி செய்வதற்கு காலில் உள்ள அசுத்த ரத்தத்தை இதயத்திற் கு கொண்டு செல்லும் செபனஸ் ரத்தக்குழாய் மற்றும் மார்புக்கூட்டி ன் உட்புறமுள்ள இடது மற்றும் வலது உள்மார்பு ரத்தக்குழாய்கள் ம ற்றும் முன் கையில் உள்ள ரேடியல் ரத்தக்குழாய்கள் போன்றவற்றை உபயோகித்து மேற்கூறிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ரத்தக்குழாய்களின் அடைப்பின் தன்மை யைப் பொறுத்து மகாதமனியின் ஆரம்பத்திலும், இதய ரத்தக்குழா ய் அடைப்பின் கீழும் இணைத்து பைபாஸ் சர்ஜரி செய்யப்படுகிறது.
பைபாஸ் சர்ஜரி என்பது ஓபன் ஹார்ட் சர்ஜரியின் மூலமும் செய்யக்கூடிய ஒரு தனிப்பட்ட இதய அறுவைச்சிகிச்சைமு றை. பொதுவாக பொதுமக்களுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரியும், பைபாஸ் சர்ஜரியும் ஒன்று என்ற குழப்பத்திற்கு மேற்கூறிய விளக்கம் பொருத்தமானதாக இருக்கும்.
மாரடைப்புக்கு பின், பைபாஸ் சர்ஜரி செய் தவர்களுக்கு வரும் மாரடைப்பு இங்கு பைபாஸ் செய்த பல கிராப்டுகளில் அடை ப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும். பைபா ஸ் செய்தவர்கள் நமக்கு பைபாஸ் கிராப் டுகள் வைக்கப்பட்டுள்ளது. இது ரத்தநாளம் போன்ற ரத்த ஓட்டமி ல்லை. கிராப்ட் வெறும் இணைப்பு தான். ஆகையால் இதை அதி ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
எத்தனை கிராப்ட்கள் எந்தெந்த இடங்க ளில் உள்ளது போன்றவற்றை வைத்து கண்காணிக்க வேண்டும். இதற்கு தே வையான பலபரிசோதனை கிராம்களை செய்து டி.எட்.டி., எக்கேகாடியோ கிராம் செக் ஆஞ்சியோ கிராம் செய்ய வேண் டும். ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், கொழுப்புகளை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இவர்கள் தனது இதயம் பை பாசால் 100 சதவீதம் நலமாக உள்ளது என்று எண்ணாமல், கிராப்ட்களை கண் காணிக்க வேண்டும்.
என்ன செய்யணும்?
ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், அதிக கெட்டக் கொழுப்புகள் உள் ளவர்களும், ரத்தக்குழாய் அடைப்புள்ள வர்களும் ஸ்டென்ட் சிகிச்சை செய்து ஸ்டென்ட் வைத்துள்ளவர்களும், பைபா ஸ் கிராப்ட் வைத்துள்ளவர்களும் தங்க ளது வாழ்க்கைமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தனி மனித ஒழுக்கம், மது, மங்கை, பல மனைவிகள், புகை பிடித்தல் இல்லாம ல் இயற்கை உணவு வகையிலும் ஒழுக் க நெறியோடும் உடற்பயிற்சி, யோகாவும், இதய ஊடுருவல் வல்லு னர் ஆலோசனையின்படி இதயத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
‘பளீச்’அறிகுறிகள்
மார்பின்மையப்பகுதியில் வலி ஆரம்பமாகும்; அல்லது, இடதுபக் கம் வலி ஏற்படும். அந்த வ லி, இடது கையில் பரவலாம்.
வயிற்றின்மேல் பகுதியில்ஒரு வித எரிச்சல் இருக்கும். இதை த்தான் பலரும், காஸ் டிரபிள் என்று நினைத்து , டைஜின் போட்டு ஏமாந்து விடுகின்றன ர்.
திடீரென மூச்சுத்திணறல் ஏற்ப டும்; திணறலும் இருக்கும். புழுக்கம் தெரியும்.
உடலில் வியர்வை பெருக்கெடுக்கும்; அதுவும் குளிர்ந்த வியர்வை யாக இருக்கும்.
தவிர்க்கலாம் நிச்சயம்
என்ன தான் அறிகுறிகள் இருந்தாலும், அதை நோயாளியால் தான் கண்டுபிடிக் க முடியும். சில சமயம் இந்த அறிகுறிகள் இல்லாமல் கூட பிரச்னை வரலாம். அ தை தவிர்க்க முடியும்… அதற்கு…
* சிகரெட் பிடிப்பதை விட வேண்டும்.
*உடல்எடையை அதிகரிக்கவிடக்கூடா து.
* சர்க்கரை , ரத்த அழுத்தம் மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* கொழுப்பு, பால், கிரீம், அசைவ உணவை கைவிட வேண்டும்.
டென்ஷனாவதை தடுத்துக் கொ ள்ளவும்.
டென்ஷன் இல்லாமல் வாழ கற் றுக்கொள்ள வேண்டும்; யோகா , தியானம் செய்தால் எந்த டென்ஷனும் போய்விடும். தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சியும் மிகவும் நல்லது; கலோரி குறைந்து, உடல் ஒபிசிட்டி இல்லாமல் “ஸ்லிம்’மாக இருக்கும்.
பொன்னான நேரம்:
ஒருவருக்கு குருதிக் குழாய் அடைப்பு காரண மாக தலை சுற்றல், நினைவிழப்பு ஆகியவை ஏற்படும் நிலை யில், உறவினர்கள் காலதாமதம் ஏதுமின் றி 3 மணி நேரத்துக்குள் சிகிச்சை வசதிக ள் கொண்ட மருத்துவ மனைக்கு நோயா ளியை அழைத்துச் செல்ல வேண்டும். இவ் வாறு செய்தால் பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப உடனடியாக மருத்துவ சிகிச்சை அல் லது புதிய சிகிச்சை அளித்து நோயாளிக்கு பக்கவாதம் அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
ஸ்டென்ட் சிகிச்சையும் மாரடைப்பும்
யாருக்காவது மாரடைப்பு வந்து விட்டால் நோயாளியை பரிசோதிக்கும் டாக்டர் ஆஞ்சியோ பண்ணிடலாம், ஸ்டென்ட்வை த்து விட்டால் போதும் என்பார். ஸ்டென்ட்சிகிச்சை உண்மையில் வரப்பிரசாதம் என்று தான் கூற வேண்டும். மூளைக்கு செல்லு ம் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்படுவதை தடுக் க ஸ்டென்ட் சிகிச்சை கைகொ டுக்கிறது என்று அமெ ரிக்க ஐ ரோப்பிய நாடுகளில் உறுதி செய்துள்ளனர்.
இந்தியாவில் பெரும்பாலும் இதயரத்த நாளங்களில் அடைப்பை நீக்க ஸ்டென்ட் டாக்டர்கள் பயன்படுத்துகி ன்றனர். அதில் நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. அதன் பின் தேவைப்ப ட்டால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்கி ன்றனர். பெரும்பாலானோருக்கு ஸ்டேன்ட் பொருத்திய பின் மருந்து மாத்திரையில் சீராக்கி விட முடிகிறது.
ஸ்டென்ட் என்றால் என்ன?
ஸ்டென்ட் என்பது மிகச்சிறிய வலைகுழா ய், உடலில் எந்த பாகத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டாலும், ரத்த ஓட்டத்தை சீராக்க இந்த வரை டியூப் ரத்த குழாயில் செருகப்படுகிறது. இதற்காக தான் ஆஞ்சியோ பிளா ஸ்டி என்ற சிகிச்சை மேற் கொள்ளப்படுகிறது.
ஆஞ்சியோவின் முக்கிய கட் டம்தான் ஸ்டென்ட் வைப்ப து. ரத்தக்குழாயின் ரத்தம் ஓட்டம் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு மட்டுமின்றி ரத் தக்குழாய் பலவீனமாக இரு ந்து அது வெடிப்பதை தடுக்க வும் ஸ்டென்ட் தயாரிக்கப்டுகிறது. சிலவகை ஸ்டென்ட்கள் மருந்து தடவியதாகவும் இருக்கும்.
இதயத்துக்கு பாதுகாப்பு அவசியம். இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்கள் சீராக இருப்பது முக்கியம். அதில் ரத்த ம் செலுத்தப்பட்டு, பின்னரே மற்ற உறு ப்புகளுக்கு செல்கிறது. இதய ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேர்ந்து அடை ப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் போது நெ ஞ்சுவலி, அதைத்தொடர்ந்து மாரடை ப்பு ஏற்படுகிறது.
இதைத்தான் ஆஞ்சினோ என்று டாக்டர்கள் கூறுகின்றனர். இதை த்தடுக்க ஆஞ்சியோ பிளாஸ்டிக் செய்யப்படுகிறது. ஸ்மென்ட் பொ ருத்தப்பட்டவுடன் ரத்த நாளத்தில் அடைப்பு நீக்கப்படுகிறது. வலை டியூப்வழியாக ரத்தம் சீராக பாய் கிறது. ஸ்டென்ட் பொருத்தா விட் டால் மீண்டும் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.
பக்கவாதத்தையும் தடுக்கும் வலது இடது கழுத்தில் கரோடைட் என்ற ரத்தக்குழாய்கள் உள்ளன. இதயத்தில் இருந்து செலுத்தப் படும் ரத்தம் இந்த ரத்தநாளங்கள் வழியா கத்தான் மூளைக்கு செல்கின்றன. இதிலு ம் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதைத்தடுக்கவும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை பயன்படுகிறது. ஸ்டென்ட் வைத் தவுடன் மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகி பக்கவாதம் தவிர்க்கப்படுகிறது. இதய ரத்த க்குழாய்களில் பலன் தரும் ஸ்டென்ட் பக்க வாதம் ஏற்படுவதை தடுக்கிறது என்ப தை அமெரிக்க,ஐரோப்பிய நிபுணர்கள் சமீபத் தில் உறுதி செய்துள்ளனர்.
மாரடைப்பு என்றால் என்ன?
இதயத்திற்கு ரத்தத்தைக் கொடுக்கும் ரத்தக் குழாய் முழு அடைப்பு ஏற்பட்டால் மார்பு வலி வரும். சிலருக்கு மரணத்தை கொடுக்கும். அஞ்சைனா என்ற மார்பு வலி, ரத்தக்குழாயில் 70 சத வீதம் முதல் 90 சதவீதம் வ ரை அடைப்பு ஏற்பட்டால் வரும். இந்த அடைப்புகளா ல் இதய தசைகள் செயல் குறைந்து, நலிவடைகிறது.
இ.எப். என்ற இதய தசைகள் இயக்கத்தின் செயலை குறிக்கும் குறியீடு. இது 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை இருக்க வேண்டும். இதுதான் முதலில் ஏற்படுகி றது.
அதன்பின் தான் மார்புவலி. கரோ னரி ரத்தக்குழாயின் முழு அடைப் புதான் மாரடைப்புக்குக் காரணம். முன் கூட்டியே, 70 முதல் 90 சதவீ தம் அடைப்புள்ள குழாயில், மீதியு ள்ள குழாயில் ரத்தம் உறைந்து முழு அடைப்பாகிறது.
இந்த நேரத்தில், மார்புக் கூடு முன் கடுமையான வலி, இந்த வலி இடது தோல் பட்டைக்கு பரவுதல், முதுகுக்குப்பின் வலி வருதல், சில சமயங்களில் பல் வலி, பகட்டு வலி, கழு த்து வலி, விழுங்க கஷ்டம், காஸ் அடைப்பு போன்று பல அறிகுறிகள் தென்படலாம்.
மவுனமான மாரடைப்பு:
இந்த அறிகுறிகள் இல்லாமல், பரிசோதனைக்கு வரும் போது மாரடைப்பு கண்டு பிடிக்கப் படுகிறது. இது மவு னமான மாரடைப்பு. இதை இ.சி.ஜி., மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த மாரடைப்பை ஊர்ஜிதம் செய்ய, என்சைம் பரிசோதனை செய்யலாம். தற்போது டிராப்ட் டெஸ்ட் என்ற பரிசோதனை இதய தசைகள் பழுதடைந் ததை காட்டும். அதன்பின், எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனை.
மார்புவலி, மாரடைப்பு என்று அறிந்த பிறகு, தீவிர சிகிச்சைப் பிரிவி ல் சேர்க்க வேண்டும். இல்லை யென்றால், அன்ஸ்டேபில் ஆஞ் ஜினாவால் (UNSTABLE ANGINA) ஒருநாள் கண்காணித் து, அடுத்த நாள் அனுப்பலாம். இல்லை யென்றால், தேவையில் லாமல் ஐ.சி.யு., அட்மிஷன் என் று பல ஆயிரம் செலவழிக்க வே ண்டி வரும். அடைப்புக்கு காரண மான ஆஞ்ஜியோகிராம் செலவு, ஐ.சி.யு., செலவைவிடக் குறைவு தான்.
வேறுபாடு என்ன?
ஆஞ்ஜியோகிராம் பரிசோதனைக் கும், டி.எம்.டி., எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனைகளுக்கும் உள் ள வேறுபாடுகள் டி.எம்.டி., என்ற பயிற்சி இ.சி.ஜி., இதில் ரத்தக்குழா ய் அடைப்பு, இதய தசைகள் செயல் பாடு, தாறுமாறாக இல்லாமல், இத யம் மூச்சிரைப்பு, படபடப்பு, மார்பு வலி கண்டறியலாம். அனுமானமா க அடைப்பை காட்டும்.
எக்கோ கார்டியோகிராம் இதய நான்கு அறைகள், நான்கு வால்வு கள், ரத்த ஓட்டம், இதய தசைகளி ன் செயல்பாடு இவைகளை குறி க்கும். கொலஸ்டிரால் என்ற லிப்ட் புரபைல், இதில் நல்ல கொ ழுப்பு (HDL),கெட்டக் கொழுப்புக ளால் LDL, VLDL, டிரை இளரைடு இவை கண்டு பிடித்து அடைப்பின் அனுமானத்தோடு கூறலாம்.
கரோனரி ஆஞ்ஜியோகிராம் என்ற ஊடுருவல் பரிசோதனை, துல்லி யமாக ரத்தக்குழாய் அடைப்பை காட்டு ம். இதற்கு, மருந்தை உட் செலுத்தி பட மெடுத்து காட்டலாம். இதில் ரத்த ஓட்டத் தை மூன்று ரத்தக்குழாயில் கண்டுகொ ள்ளலாம். இதில் இதய துடிப்பையும், ரத் த ஓட்டமும் டைனமிக் என்ற செயல்பா ட்டில் பார்க்கலாம்.
மற்ற 64, 120, சி.டி., ஆஞ்ஜியோகிராமில் கரோனரி வரைபடம் பார்க்கலாம். ஆனா ல், ரத்த ஓட்டம், சிஸ்டலி, டியஸ்டலி போன்றவற்றுக்கு படத்தைப் பார்க்க முடியாது. இதுதான் சிறந்தது. பை-பாஸ் சர்ஜரி, ஆஞ்சியோ பிளாஸ்டி, ஸ்டென்ட் சிகிச்சைக்கு இதுதான் முக்கிய டெஸ்ட்.
யார் யாருக்கு எப்போது தீவிர சிகிச் சை (ICC)
மாரடைப்பு, இ.சி.ஜி.,யில் மாற்றம், டிராப்ட் டெஸ்ட் பாசிடிவ் ஐ.சி.யு., தேவை .
மூச்சுத்திணறல், இதய பம்பிங்குறை வினால் நுரையீரலில் தண்ணீர் சேர்தல்.
படபடப்பு, மயக்கம், தலைசுற்றல், இ.சி.ஜி.,யில் மாற்றம்.
மயக்கம், மூச்சு பேச்சு இல்லாத நிலை.
ரத்த அழுத்தம் குறைதல், இதய த்துடிப்பு குறைதல்.
மேற்கூறியவைகள் தான் முக் கிய ஐ.சி.யு., அனுமதிக்கு கார ணமாகிறது. இந்நிலையில், ந ல்ல முன்னேற்றம் வந்த பிறகு ஆஞ்ஜியோகிராம் செய்ய வே ண்டும். சில நேரங்களில், மேற் கூறிய நிலையில் முன்னேற்றம் இல்லையென்றால், உயிரை க் காப்பாற்ற ரெஸ்க்யூ (Rescue Angyogram plasty) ஆஞ்சியோ கி ராம் செய்ய வேண்டும். முன்கூட்டியே அடைப்பை அறிய, யார் யாரு க்கு கரோனரி ஆஞ்ஜியோகிராம் செ ய்ய வேண்டும்.
அ) ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியா தி, அதிக கொதிப்பு உள்ளவர்கள், பாரம்பரிய தன்மை, புகைப்பிடிப்ப வர், அதிக எடை உள்ளவர்கள்.
ஆ) நெஞ்சு எரிச்சலுள்ளவர்கள், சிறிது தூரம் நடந்தால் மூச்சிரைப்பு, படபடப்பு ள்ளவர், நாளாக நாளாக இனம் புரியா தளர்ச்சி.
இ) ரிஸ்க் உள்ள பணியாளர்கள் நடுத்தர வயதி னர். வருடத்திற்கு ஒருமுறை குடும்பத் தலை வர் தனது குடும்பத்தினருக்காகவாவது இந்த மாரடைப்பு வர காரணமான அடைப்பை கண் டறிய வேண்டும்.

உடலுக்கும் கால அட்டவணை




நம் உடலுக்கும்  கால அட்டவணை உண்டு :-


++++++++++++++++++++++++++++++++++++++


இதை நாம் முறையாகப்பின்பற்றினால் 

டாக்டரிடம் 


போக வேண்டிய அவசியமே இல்லை.


இதோ கால அட்ட வணை:-

-----------------------------------------

விடியற்காலை 3 முதல் 5 மணி வரை - 

நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், 

மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.

காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். 

இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க 

வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.

காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த 

நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.

காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். 

வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் 

நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் 

கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். 

இதய 

நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய 

நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், 

கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.

பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். 

மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க 

வேண்டும்.

பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் 

நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த 

நேரம்.

மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். 

தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.

இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். 

பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி 

இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற 

நேரம்.

இரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல் 

அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் 

இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.

இரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம். 

அவசியம் உறங்க வேண்டும்.


இரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம். 

ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். 

கட்டாயம் தூங்க வேண்டும்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக 

இருந்தால் உங்கள் நண்பர்கள் எல்லோருக்கும் 

உறவினகள் அனைவரிடமும் 

தெரியப்படுத்துங்கள் விழிப்புணர்வு செய்யுங்கள் 

!
இதுபோன்ற இயற்கை மருத்துவ பயனுள்ள பல 


தகவல்களை உடனுக்குடன் அறிந்திட எமது 

இயற்கை மருத்துவ பக்கங்களில் 

இணைந்திருங்கள்..

புதன், 24 டிசம்பர், 2014

சைனஸ்



சைனஸ் தலைவலி ஏற்படுவது ஏன்? - தெரிந்துகொள்வோம்....
மார்கழி தொடங்கிவிட்டால் போதும் ஜலதோஷம், மூக்கடைப்பு, ஆஸ்துமா இளைப்பு என்று ஆரோக்கியப் பிரச்சினைகள் வரிசைகட்டி வந்துவிடும். அதிலும் பனிப்பொழிவால் ஏற்படும் சளிப் பிரச்சினையை அலட்சியப்படுத்தினால், அது சைனஸ் பிரச்சினையாக உருவெடுத்து ரொம்பவே சிரமப்படுத்தும்.
‘சைனஸ்’ என்றால் என்ன?
நம் மூக்கைச் சுற்றி நான்கு ஜோடி காற்றுப் பைகள் உள்ளன. இதற்குப் பெயர்தான் சைனஸ். மூக்கின் உட்புறமாகப் புருவத்துக்கு மேலே நெற்றியில் உள்ள சைனஸ் - ஃபிரான்டல் சைனஸ். மூக்குக்கு இரு புறமும் கன்னத்தில் உள்ள சைனஸ் - மேக்ஸிலரி சைனஸ். கண்ணுக்கும் மூக்குக்கும் நடுவில் உள்ளது - எத்மாய்டு சைனஸ். கண்களுக்குப் பின்புறம் மூளையை ஒட்டி உள்ள சைனஸ் - பீனாய்டு
சைனஸ். இவற்றில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டாலும் பிரச்சினைதான்.
நாம் சுவாசிக்கும் காற்றைத் தேவையான வெப்பத்தில் நுரையீரலுக்குள் அனுப்பும் முக்கியமான வேலையை இந்த சைனஸ் காற்றுப் பைகள் செய்கின்றன. சாதாரணமாக சைனஸ் அறைகளிலிருந்து சிறிதளவு திரவம் சுரந்து, மூக்குக்கு வரும். மூக்கில் ‘மியூகஸ் மெம்பரேன்’ எனும் சளிச் சவ்வு இருக்கிறது. சைனஸ் திரவம் இதை ஈரப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இதன் பலனால், வெளிக்காற்று வெப்பத்துடன் நுழைந்தாலும், அது ஈரப்படுத்தப்பட்டு நுரையீரலுக்குள் அனுப்பப்படுகிறது. இந்த சைனஸ் அறைகளின் திரவ வடிகால்கள் அடைபட்டு, அங்குத் திரவம் தேங்கும்போது சைனஸ் பிரச்சினை (Sinusitis) ஏற்படுகிறது.
சைனஸ் பாதிப்பு ஏன்?
ஆரோக்கியக் குறைவு, சுற்றுச்சூழல் மாசு, ஒவ்வாமை இந்த மூன்றும்தான் சைனஸ் பிரச்சினைக்கு முக்கியக் காரணங்கள். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைத் தொற்றுகள் மூலமாகச் சளி பிடிக்கும்போது சைனஸ் தொல்லை கொடுக்கிறது. மூக்குத் துவாரத்தை இரண்டாகப் பிரிக்கிற நடு எலும்பு வளைவாக இருப்பது, ‘பாலிப்’ என அழைக்கப்படுகிற மூக்குச் சதை வளர்ச்சி ஆகியவை இந்தப் பிரச்சினையைத் தூண்டுகின்றன.
அழற்சியே அடிப்படை
மாசடைந்த காற்றில் கலந்துவரும் தொற்றுக் கிருமிகள் சைனஸ் அறைக்குள் புகுந்துவிடும் போது, அங்குள்ள ‘சளி சவ்வு’ வீங்கி அழற்சியாகும். இதனால் அளவுக்கு அதிகமாக நிணநீர் திரவம் சுரந்து, மூக்கு வழியாக வெளியேறும். ஜலதோஷம் பிடித்தால், தூசு, புகை, வாசனைத் திரவியம் காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டால், மிகவும் குளிர்ச்சியானதைச் சாப்பிட்டால், பனியில் நடந்தால், மழையில் நீண்ட நேரம் நனைந்தால் இதே நிலைமைதான்.
சைனஸ் அறையில் அழற்சி அதிகரிக்கும்போதும், மூக்கில் சதை வளரும்போதும் இந்த நீர் வெளியேற முடியாத அளவுக்கு மூக்கு அடைத்துக்கொள்ளும். அப்போது மூக்கை உறிஞ்சிக்கொண்டே இருப்பார்கள். இதனால் சைனஸ் அறையில் அழுத்தம் அதிகமாகி நிலைமை இன்னும் மோசமடையும்.
அறிகுறிகள் என்ன?
அடிக்கடி தும்மல், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, தலைவலி ஆகியவை சைனஸ் பாதிப்பின் பொதுவான அறிகுறிகள். கண்ணுக்குக் கீழே, கன்னம், முன்நெற்றி ஆகிய இடங்களைத் தொட்டால் வலி ஏற்படும். தலையைக் குனிந்தால் தலை பாரம் அதிகரிக்கும். இவற்றுடன் காய்ச்சல், தொண்டையில் சளி கட்டுவது, இரவில் இருமல் வருவது, உடல் சோர்வு போன்றவையும் சேர்ந்துகொள்ளும். மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் கட்டியான மூக்குச் சளி வெளியேறும். சைனஸ் பாதிப்பு நீடித்தால், சளியில் துர்நாற்றம் வீசும். வாசனை தெரியாது; ருசியை உணர முடியாது.
என்ன சிகிச்சை?
இந்தப் பிரச்சினைக்கு ஒவ்வாமைதான் முக்கியக் காரணியாக இருப்பதால், அந்த ஒவ்வாமையை அகற்றும் சிகிச்சையை முதலில் மேற்கொள்ள வேண்டும். மூக்கு ஒழுகுவதை நிறுத்த ஆன்ட்டிஹிஸ்டமின் மாத்திரைகளைச் சாப்பிடலாம். மூக்கடைப்பைப் போக்க, மூக்கில் சொட்டு மருந்து விடுவது நல்லதல்ல. சொட்டு மருந்து விடுவதால், ஆரம்பத்தில் நிவாரணம் கிடைப்பது போலிருக்கும். ஆனால், நாளடைவில் இதனால் நிவாரணம் கிடைக்காது.
இதற்குப் பதிலாக, ஸ்டீராய்டு கலந்த மூக்கு ஸ்பிரேயர்களைப் பயன்படுத்தலாம். இவற்றால் பக்கவிளைவு எதுவும் ஏற்படாது. மூக்கின் வெளிப்புறத்திலிருந்து இவற்றைப் பயன்படுத்துவதால், ரத்தத்தில் ஸ்டீராய்டு மருந்து கலப்பதற்கு வாய்ப்பில்லை. மருத்துவர் சொல்லும் கால அளவுக்கு இந்த மூக்கு ஸ்பிரேயர்களைப் பயன்படுத்த வேண்டியது முக்கியம்.
மூக்கடைப்பைப் போக்க டிங்க்சர் பென்சாயின், மென்தால், யூகலிப்டஸ் மருந்து போன்றவற்றைப் பயன்படுத்திக் காலையிலும், இரவிலும் நீராவி பிடிப்பது நல்லது. இதனால் மூக்கில் உள்ள சளி இளகிச் சுலபமாக வெளியேறிவிடும். தொற்றுக் கிருமிகள் இருப்பதாகத் தெரிந்தால் தகுந்த ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைச் சாப்பிடலாம்.
எண்டாஸ்கோப்பி உதவும்!
முன்பெல்லாம் சைனஸ் திரவத்தை வெளியேற்ற மூக்கினுள் துளை போடுவார்கள். இதற்குப் பயந்தே பலரும் சிகிச்சைக்கு வரத் தயங்குவார்கள். இந்த நிலைமை இப்போது இல்லை. எண்டாஸ்கோப்பி உதவியுடன், ‘பலூன் சைனுபிளாஸ்டி’ (Balloon sinuplasty) எனும் நவீன சிகிச்சை முறையில், வலி இல்லாமல் மிகத் துல்லியமாகச் சிகிச்சை அளித்து முழு நிவாரணம் அளிக்கமுடியும். மூக்கின் நடு எலும்பு வளைவு, சதை வளர்ச்சி போன்றவற்றுக்கும் இந்தக் கருவி மூலம் சிகிச்சை தர முடியும்.
தடுப்பது எப்படி?
சுயசுத்தம், சுற்றுப்புறச் சுகாதாரம் பேணுவதன் மூலம் கிருமித் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். சமச்சீரான உணவைச் சாப்பிட்டு ஆரோக்கியம் காக்க வேண்டும். அடிக்கடி ஜலதோஷம் பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஜலதோஷம் உள்ளவர்களின் அருகிலிருப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வாமைப் பொருளைத் தவிர்க்க வேண்டும். தூசு, புகைக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் வாகனத்தில் செல்லும்போது முகத்தில் சுகாதார மாஸ்க் அணிந்து கொள்ளலாம். தினமும் குறைந்தது அரை மணி நேரம் பிராணாயாமம் செய்ய வேண்டும். தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். ஐஸ், ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான உணவுப் பதார்த்தங்களை அவசியம் தவிர்க்க வேண்டும்.
செய்யக் கூடாதவை
குளிர்பானங்களைக் குடிக்கவே கூடாது. பனியில் அலையக் கூடாது. புகைபிடிக்கக் கூடாது. புகையுள்ள இடங்களில் வசிக்கக் கூடாது. மூக்குப்பொடி போடக் கூடாது. அசுத்தமான நீர்நிலைகளில் குளிக்கக் கூடாது. மூக்கைப் பலமாகச் சிந்தக் கூடாது. விரல்களால் அடிக்கடி மூக்கைக் குடையக் கூடாது.
மூக்கடைப்பைப் போக்கும் இன்ஹேலரை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால், சைனஸ் அறையில் அழுத்தம் அதிகமாகி, அழற்சி தீவிரமடையுமே தவிர, குறையாது. இதுபோல் ‘வேப்பரப்’ களிம்பை அளவுக்கு மேல் மூக்கின் மீது தடவினால், மூக்கில் உள்ள ரத்தக் குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு மூக்கு புண்ணாகிவிடும்.

செவ்வாய், 23 டிசம்பர், 2014

சொரியாசிஸ்



சொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன ?
சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை மீன் செதில் படை என்றும் அழைக்கலாம்.

சொரியாசிஸ் தோலில் உள்ள செல்கள் வேகமாக இறப்பதன் மூலம் உண்டாகிறது. இதன் விளைவாக தோல் தடித்து மீன் செதில் போன்று இறந்த செல்கள் உதிரும், புரையோடும்.
தோலிலுள்ள பல சிறு இரத்த நாளங்கள் வீங்கிவிடுவதால் தோல் சிவப்பு நிறமாகக் காணப்படும்.

சொரியாசிஸ் எவ்வாறு தோற்றமளிக்கும்?

சொரியாசிஸ் என்பது தோலில், மீன் செதில் போன்று இறந்த செல்கள் உதிர்ந்து விழும் புரையுடன் கூடிய வெண்மை / சிவப்பு திட்டுகளாக (Silver Scaly patches) காணப்படும்.
உடலின் எந்தப்பாகத்தில் வேண்டுமானாலும் வரலாம்.
முழங்கை, முழுங்கால் மூட்டு, முதுகு, தலையுச்சி முதலிய பாகங்கள் பொதுவாக பாதிக்கப்படும்.

சொரியாசிஸ் தொற்று நோயா?

சொரியாசிஸ் தொற்று நோயல்ல. இது மற்றவர்களுக்கு பரவாது
சுகாதார குறைவு காரணமாக இது ஏற்படாது.

சொரியாசிஸ் வர காரணம் என்ன ?

சொரியாசிஸ் மரபு காரணம் மற்றும் சுற்றுச் சூழல் நிலை இவற்றின் பாதிப்பினால் ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது.
சொரியாசிஸால் பாதிக்கப்படுபவர்களில் 25% பேர் சொரியாசிஸ் நோயுடைய குடும்பத்திலிருந்து வந்தவர்களே, சிலருக்கு மரபு நிலை காரணமாகிறது.
உடல், மன அழுத்தங்கள், குரல்வளை தொற்று, ப்ளூ, ஸ்டீராய்ட் ஹார்மோன்ஸ், சில ஆண்ட்டி ஹைபர் டென்சிவ் போன்ற சில மருந்துகள், சோரியாசிஸை மேலும் மோசமாக்கும்.
குடிபழக்கம், புகைபிடித்தல் சொரியாசிஸை மோசமாக்கும்.

சொரியாசிஸ் நோயின் விளைவுகள்

சொரியாசிஸ் நோயாளிகளுக்கு மூட்டுவலிகளும், வீக்கமும் வரலாம்.
சொரியாசிஸ் விரல்களையும், கால்விரல் நகங்களையும் தாக்கி, சிறு குழிகளையும், கருமை நிறத்தையும், நகங்கள் தடிப்பையும், ஏற்படுத்தும். நகம் உடையலாம்.

சொரியாசிஸ் யாருக்கு வரும் ?

சொரியாசிஸ் ஆண், பெண் இருவரையும் சமமாகத் தாக்கலாம்.
சொரியாசிஸ் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். வழக்கமாக 20 வது வயதில் தாக்கத் தொடங்கும். பிறப்பிலிருந்தும் முதிய வயதிலும் கூட இது வரலாம்.
ஒரு முறை சொரியாசிஸ் வந்ததும், குறைதல், தணிதல், அதிகரித்தல் என பல்வேறு நிலை மாற்றங்கள் ஏற்படும்.

சொரியாசிஸ்க்கு என்ன மருத்துவங்கள் உள்ளன.
நவீன மருத்துவத்தில் பல மருந்துகள் உபயோகப்படுத்தப்படுகின்றன, டாபிகல் ஸ்டீராய்ட்ஸ்
மேற்பூச்சுக்கள் (Steroids creams), போட்டோதெரபி, அல்ட்ரா வைலட்,
மெதாட்டுரக்ஸாட் (methotrexate) இத்தகைய மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே நோயாளிகள் இந்தப் பக்க விளைவுகளைப் பரிசோதித்துக் கொள்ள அடிக்கடி இரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் தொடர்ந்து இந்த மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.

சொரியாசிஸ் நோயாளிகள் செய்யக்கூடாதவை, செய்ய வேண்டியவை
Ø தோலைச் சொரியாதீர்கள் ஏனெனில் இது குணமாவதைத் தாமதப்படுத்தும்.
Ø ஹோமியோபதி மருந்துகள் வேலை செய்து விளைவுகள் காட்ட பல வாரங்கள் ஆகுமாதலால் மருத்துவத்தை விரைவில், இடையில் நிறுத்திவிடாதீர்கள்.
Ø சொரியாசிஸைக் கட்டுப்படுத்த தரப்பட்ட மருந்துகளையும், மருத்துவத்தையும் திடீரென்று நிறுத்திவிடாதீர்கள். இதனால் நோய் இன்னும் மோசமாகும்.
Ø மருந்துகளை தொடர்ந்து சீராக எடுத்துக்கொள்ளுங்கள்.
Ø தோலை எப்போதும் ஈரத்தன்மையுடையதாக வைத்திருங்கள். அது நமைச்சலையும், அரிப்பையும், புரை ஏற்படுவதையும் தடுக்கும்.
Ø சூரிய ஒளியில் இருப்பது பொதுவாக நல்லதே, ஆனால் அதிகமாக வெகு நேரம் இருப்பதால் வேர்க்குருக்கள் உண்டாகும். அதனால் சொரியாசிஸ் தீவிரமடையும்.
Ø மன அழுத்தம் சொரியாசிஸை அதிகப்படுத்தும். அமைதியாக இருக்கவும், உடற்பயிற்சி செய்யவும், ஒய்வு எடுத்துக்கொள்ளவும்,

சோரியாசிஸ் குணப்படுத்துவதற்கான மருந்து என்னவென்றால் "வெட்பாலை" -(Holarrhena Antidysenterica).

இதனை வட்டார மொழிகளில் 'வெம்பாலை' என்று கூறுவர்.

இந்த வெட்பாலையை எப்படி பயன்படுத்தவது என்பதை பற்றி பார்க்கலாம்.
வெட்பாலை -(Holarrhena Antidysenterica):
முதலில் தூய்மையான தேங்காய் எண்ணெய்யில் வெட்பாலையின் கொழுந்து ( நுனி பகுதி ) அதை ஒடித்து பார்த்தால் அதில் பால் வடியும்.அந்த பாலினை சேகரித்து தேங்காய் எண்ணையில் கலந்து வெயிலில் வைக்க வேண்டும்.

இதில் கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் இரண்டு ஸ்பூன் வெட்பாலையின் பாலை கலக்க வேண்டும்.அது சிறிது நேரம் கழித்து கத்திரிகாய் நிறத்தில்(purple color)அந்த எண்ணெய் மாறும் வரை வைக்க வேண்டும்.அப்படி நிறம் மாறாமல் இருந்தால் இன்னும் சிறிது நேரம் அதை வைத்து இருக்க வேண்டும். கண்டிப்பாக மாறி விடும்.இதனை நன்றாக உடம்பில் பூசி செதில்களில் நனையும்படி தேய்த்து கொள்ளவும். தினமும் இதனை தேய்த்து வந்தாலே போதுமானது.
எப்போதும் இந்த எண்ணெய் உங்கள் உடம்பில் சிறுது அளவு இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். தலைக்கும் இந்த எண்ணெய் தேய்த்து சீகக்காய் தேய்த்து குளித்து விட்டு மீண்டும் இதே எண்ணெய் தேய்த்து கொள்ள வேண்டும். இது பொதுவாக சித்தா மூலிகை தோட்டத்தில் கிடைக்கும்.

அது போக இதே எண்ணையை எந்த ஒரு வெட்டு காயமோ அல்லது தோல் சம்பந்தபட்ட அனைத்திற்கும் இதே எண்ணையை உபயோகபடுத்தலாம்.

அடுத்ததாக உணவு முறை :
உணவு முறையை பொறுத்த வரை நீங்கள் கிழே உள்ளதை மட்டும் மனதில் வைத்து கொள்ளுங்கள். இதனை மட்டும் தவிர்த்தல் போதும்.
*பால்
*மது
*செயற்கை நிறம் ஊட்டுபவை மற்றும் ப்ரிசெர்வேடிவ்கள்
*காளான் (இது பூஞ்சான் வகைகளை சேர்ந்தது. சோரியாசிஸ் அல்லாதவர்களும் இதனை உட்கொள்ள கூடாது என்பதே உண்மை.).
*உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் உணவு வகைகள்.
இதனை மட்டும் கடை பிடித்தால் போதுமானது.

காளான் எதற்காக சேர்க்க கூடாது என்றால் அதில் விஷ காளான்கள் இருக்கும். சுத்தமான காளான்களை சாப்பிடுவதில் தவறு இல்லை. இதை எப்படி கண்டு பிடிப்பது என்றால் சுடுநீரில் காளான்களை போட்டு அதில் ஒரு வெள்ளி காசினை போட்டால் அது நிறம் மாற கூடாது. அப்படி இல்லாமல் மாறினால் அது விஷ காளான்கள்.சோரியாசிஸ் உள்ளவர்கள் சுத்தமான காளான்களாக இருந்தாலும் சேர்க்க கூடாது.


திங்கள், 22 டிசம்பர், 2014

கொலஸ்டிரால்



உங்கள் கொல்ஸ்டிரால் டெஸ்டில் பொதுவாக கீழ்காணும் வகை கொலஸ்டிரால்கள் காணப்படும்.
1) மொத்த கொலஸ்டிரால்: இது 200க்கு கீழ் இருந்தால் பாதுகாப்பு என ரிப்போர்ட் கூறும்
2) எச்டிஎல் கொலஸ்டிரால் (அல்லது நல்ல கொலஸ்டிரால்): இது 40க்கு அதிகம் இருக்கணும்
3) எல்டிஎல் கொலஸ்டிரால் (அல்லது கெட்ட கொலஸ்டிரால்): இது 130க்கு கீழே இருக்கணும்
4) ட்ரைகிளிசரைட்: இது 150க்கு கீழே இருக்கணும்.
இதில் பலரும் மொத்த கொலஸ்டிரால் 200 தாண்டினால் உடனே தான் கொல்ஸ்டிரால் பேஷண்ட் என நினைத்து பீதி அடைவார்கள். கூடவே கெட்ட கொல்ஸ்டிரால் எனும் எல்டிஎல் 130 (சில நாடுகளில் 100) தாண்டினால் அவ்வளவுதான். “எனக்கு ஸ்டாடினை பரிந்துரையுங்கள்” என தானாக மருத்துவரிடம் போய் நோயாளியாக ஆகிறவர்கள் உண்டு.
உண்மையில் கெட்ட கொல்ஸ்டிரால், நல்ல கொல்ஸ்டிரால் என்பது எல்லாம் பொதுமைபடுத்துதல். எல்டிஎல்லில் பல உள்வகை உண்டு. அதில் சில நமக்கு நல்லது, சில கெட்டது. நல்ல கொல்ஸ்டிரால் எனப்படும் எச்டிஎல்லில் கூட சிலவகை எச்டிஎல் நல்லது, சிலவகை எச்டிஎல் கெட்டது.
எல்.டி.எல்லில் இரு வகை. சின்ன சைஸ் எல்.டி.எல் (LDL-B), பெரிய சைஸ் எல்.டி.எல் (LDL-A).பெரிய சைஸ் எல்டிஎல் கொலஸ்டிரால் ஆபத்தற்றது. காரணம் அது உங்கள் ரத்த நாளங்களில் ஒட்டி மாரடைப்பை ஏற்படுத்தாது. ஆனால் சின்ன சைஸ் எல்டிஎல் கொலஸ்டிரால் மிக ஆபத்தானது.
ஆனால் உங்கள் கொல்ஸ்டிரால் ரிப்போர்ட் இது எதையும் காட்டுவது இல்லை. உங்கள் எல்டிஎல் கொல்ஸ்டிராலின் உள்வகைகள், எச்டிஎல் கொலஸ்டிராலின் உள்வகைகள் இவற்றை உங்கள் கொல்ஸ்டிரால் ரிப்போர்ட் பிரித்து காட்டுவது இல்லை. அப்படி பிரித்து ஆராயாமல் உங்களுக்கு இதயநோய் வரும் ஆபத்து உள்ளதா, இல்லையா என்பதை கொலஸ்டிரால் ரிப்போர்டை மட்டும் வைத்து கண்டுபிடிக்கவே முடியாது. அதற்கு NMR lipoprifile test என்பது போன்ற மேலும் அட்வான்ஸ்டான மருத்துவ பரிசோதனைகள் உள்ளன. அதை எல்லாம் செய்யாமல் “உங்களுக்கு கொல்ஸ்டிரால் பிரச்சனை” என உங்கள் மருத்துவர் கூறினால் அதை ஏற்று நீங்கள் ஸ்டாடின்களை உண்டு நோயாளியாக வேண்டாம். NMR lipoprofile பரிசோதனை செய்ய சொல்லி கேளுங்கள். அந்த சோதனை முடிவை விளக்க சொல்லி உங்கள் மருத்துவரை கேளுங்கள்.
மேலும் உங்கள் கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டில் பல சிக்கல்கள் உள்ளன. அதில் முக்கியமானது என்னவெனில்
உங்கள் எல்.டி.எல் கொல்ஸ்டிரால் அளவை நேரடியாக அளக்கும் சக்தி அடிப்படையான கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டில் இல்லை. பல கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டில் LDL-calculated என எழுதி இருப்பார்கள். சிலவற்றில் எழுதி இருக்க மாட்டார்கள். ஆனால் எழுதி இருந்தாலும், இருக்காவிட்டாலும் நூற்றுக்கு 99.99% ரிப்போர்டுகளில் உங்கள் எல்.டி.எல் நேரடியாக அளக்கபடுவது இல்லை. கணக்கிடதான் படுகிறது.
எல்.டி.எல்லை கணக்கிட உதவும் பார்முலாவின் பெயர் ஃப்ரிட்வால்ஃப் பார்முலா. அது எப்படி கணக்கிடபடுகிறது என எழுதினால் கட்டுரை கணக்கு வகுப்பாக மாறிவிடும் அபாயம் இருப்பதால் அதை செய்யவில்லை. ஆனால் தேவைபட்டால் பின்னூட்டத்தில் கேளுங்கள். பதில் அளிக்கிறேன்.
எல்.டி.எல்லை நேரடியாக அளக்காமல் பார்முலாவை வைத்து கணக்கிடுவதில் உள்ள தவறு என்ன?
இதில் தவறு என்னவெனில் உங்கள் ட்ரைகிளசரடு எண் 100க்கு கீழ் அல்லது 400க்கு மேல் இருந்தால் ஃப்ரிட்வால்ஃப் பார்முலா வேலை செய்யாது. அது உங்கள் எல்.டி.எல் எண்ணை மிகைபடுத்தி காட்டும். ஆக உங்கள் ட்ரைகிலசரைட் நூறுக்கு கீழ் இருந்தால் உங்கள் எல்.டி.எல் எண் என உங்கள் கொலஸ்டிரால் ரிப்போர்ட்டில் காட்டபடும் எண் முழுக்க தவறானது.
ஆக கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டை வைத்து ஸ்டாடினை உட்கொள்ள துவங்குவது என்பது தெர்மாமிட்டரை மட்டும் பார்த்து டைபாய்டு மருந்து உட்கொள்வதற்கு சமம். தெர்மாமீட்டர் மிக அடிப்படையான சோதனை. டைபாய்டு இருக்கா இல்லையா என்பதை அறிய மேலும் பல சோதனைகளை செய்யவேண்டும்.அப்படி செய்யாமல் ஸ்டாடினை உட்கொள்வது பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஸ்டாடின் என்பது விளையாட்டு இல்லை. அதில் நினைவு இழப்பு மாதிரி பல பக்கவிளைவுகள் உண்டு. மேலும் அது கொலஸ்டிராலை குறைக்குமே ஒழிய இதய அடைப்பை தடுப்பதற்கான சாத்தியகூற்றை மிகவும் குறைவாக தான் குறைக்கும். இப்படி பக்கவிளைவுகளை உன்டாக்கும் மருந்தை தவறாக இருக்க கூடிய கொல்ஸ்ட்ரால் ரிப்போர்ட்டை மட்டும் நம்பி உண்பது சரியல்ல.
என்.எம்.ஆர் டெஸ்ட் செலவு பிடிக்கும் விஷயம் தான். ஆனால் கொல்ஸ்டிராலை குறைக்க உண்ணும் ஸ்டாடின் விலையை விட அது குறைவானது தான்.
மற்றபடி உங்கள் கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டில் முக்கியமான எண்கள் எவை?
எச்.டி.எல் மற்றும் ட்ரைகிளசரைடு
எச்.டி.எல் என்பது குப்பை லாரி மாதிரி. அது உங்கள் ரத்தநாளங்களுக்குல் சென்று கெட்ட எல்.டி.எல் கொலஸ்டிராலை வாரி கொண்டு வந்து உங்கள் லிவரில் சேர்க்கும். லிவர் அந்த கெட்ட எல்.டி.எல் கொலஸ்டிராலை உடைத்து கழிவாக மாற்றி அனுப்பிவிடும். ஆக எச்.டி.எல் அதிகமாக இருந்தால் அது மிக ஆரோக்கியமான விஷயம். எச்.டி.எல் 40க்கு கீழே இருந்தால் உங்கள் உடனாடி வேலைகள் அனைத்தையும் ஒத்தி போட்டுவிட்டு எச்.டி.எல்லை 40க்கு மேல் உயர்த்த நீங்கள் முயலவேண்டியது அவசியம். உங்கள் எச்.டி.எல் 60 தான்டினால் அது மிக பெரிய பலம். உங்கள் ட்ரைகிளிசரடு 100க்கு கீழ் இருந்து உங்கள் எச்.டி.எல் 60க்கு மேல் இருந்தால் அது நீங்கள் புல்லட் ப்ரூப் ஆடையை அணிந்து இருப்பது போன்ற பாதுகாப்பை உங்கள் இதயத்துக்கு அளிக்கும். உங்கள் எச்.டி.எல் 60 தான்டி, ட்ரைகிளிசரைடு 140க்கு கீழ் இருந்தால் அப்புறம் உங்கள் எல்.டி.எல் ஆபத்தை விளைவிக்காத நல்ல வகை எல்.டி.எல்லாக இருக்கும் வாய்ப்பு தான் மிக அதிகம்.
ட்ரைகிளசரைடு என்பது என்ன?அது எப்படி உருவாகிறது?அதை எப்படி குறைப்பது? எச்.டி.எல்லை எப்படி அதிகரிப்பது?
இதற்கு இரன்டு வழிமுரைகள் தனியாக இல்லை. இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. அதாவது……
ட்ரைகிளசரிடு அதிகமாக இருந்தால் எச்.டி.எல் தானாக குறையும்.
ஆக எச்.டி.எல்லை அதிகரிக்க ட்ரைகிளீசரைடை குறைத்தே ஆகவேன்டியது அவசியம். ட்ரைகிளிசரைடை குறைத்தால் எச்.டி.எல் தானாக அதிகரிக்கும்.
ட்ரைகிளசரைடை எப்படி குறைப்பது?
இதை அறிய ட்ரைகிள்சரைடு எப்படி உருவாகிறது என்பதை அறிவது முக்கியம்.
ட்ரைகிளிசரைடு என்பது வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை தான் ட்ரைகிளிசரைடு. நீங்கள் அரிசி, கோதுமையை உன்டால் அதில் உள்ள சர்க்கரை உங்கள் உடலால் குளுகோஸ் ஆக மாற்ரபடும். குளுகோஸ் தான் எரிபொருள். ஆனால் அந்த எரிபொருலை செலவு செய்யாவிடில் அதை சேமிக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இரன்டுநாளுக்கு மேல் தேவையான அளவு குளுகோசை சேமிக்கும் சக்தி உடலில் இல்லை. ஆனால் உடலில் ஒவ்வொரு செல்லிலும் ஏராளமாக கொழுப்பை சேர்க்கும் சேமிப்புதிறன் உங்கள் உடலுக்கு உள்ளது. ஆக மீதம் குளுகோஸ் உங்கள் லிவருக்கு அனுப்பபடும். லிவர் அதை ட்ரைகிளிசரைடு ஆக மாற்றி ரத்தத்தில் அனுப்பும். அது உங்கள் உடலில் ஊளைசதையாக சேமிக்கபடும்.
ட்ரைகிளசரைடை குறைக்க வழி இதில் இருந்தே தெரியும்.
சர்க்கரைசத்து (carbohydrates) உள்ள உணவுகளை உண்பதை குறைப்பது, அல்லது நிறுத்துவது.
சர்க்கரை சத்து நிரம்பிய உணவுகளை உண்பதை குறைத்தால் குரைவான அளவில் ட்ரைகிளிசரடை உடல் உருவாக்கும்.
சர்க்கரைசத்து நிரம்பிய உணவுகளை உண்பதை சுத்தமாக நிறுத்தினால் ட்ரைகிளிசரைடு உருவாகும் வழியே உடலில் கிடையாது. உடலில் குளுகொஸ் குறைவு எண்கையில் அதிக குளுகோசை சேமிக்கும் அவசியமே இல்லையே?
ட்ரைகிளிசரடு குறைந்தால் எச்.டி.எல் தானாக் அதிகரிக்கும். இவை இரண்டும் நடந்தால் உங்கள் எல்.டி.எல் ஆபத்தை விளைவிக்கும் சின்ன வகை எல்.டி.எல்லில் இருந்து உடலுக்கு நலனளிக்கும் பெரிய வகை எல்.டி.எல் ஆக மாறும். அதன்பின் உங்களுக்கு கொல்ஸ்டிராலை பற்றி யாதொரு கவலையும் வேண்டியது இல்லை

அல்சர் ulcer controversy


நேரத்திற்குச் சாப்பிட்டால்தான் அல்சர் வரும்!

நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் 

என்று உங்களுக்கு இத்தனை நாளும் 

போதிக்கப்பட்டுள்ளது. அல்சர் 

பெரும்பாலும் நேரா நேரத்திற்குக் கடிகாரத்தைப் 

பார்த்துச் சாப்பிடுபவர்களுக்கே வருகிறது 

என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.



ஒரு பாத்திரத்தில் தயிர் சாதமோ அல்லது 

சாம்பார் சாதமோ எடுத்து வைத்து ஒரு பத்து 

பதினைந்து நாட்கள் கழித்துப் பாருங்கள். 

இப்போது அந்தச் சாதம் கெட்டுப்போய் நாற்றம் 

எடுக்கும். சில சமயம் புழுக்கள்கூட 

வந்திருக்கலாம். மீண்டும் அந்தப் பாத்திரதை 

மூடி அப்படியே வைத்து விடுங்கள். மறுபடியும் 

ஒரு பத்து பதினைந்து நாட்கள் கழித்துப் 

பாருங்கள். அந்தக் கெட்டுப்போன சாதம் 

விஷமாக மாறி, அந்தப் பாத்திரத்தைப் பாதித்து 

ஓட்டை போட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம் 

(இதை வீட்டிலேயே சோதித்துப் பாருங்கள்).


இப்போது அல்சர் எப்படி வந்தது என்று 

உங்களால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும். 

நீங்கள் நினைப்பது போல் நேரத்திற்குச் 

சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்பதெல்லாம் 

பொய். பசிக்காமல் நேரத்திற்குச் 

சாப்பிடும்போதுதான் அல்சரே வருகிறது.


பசித்துச் சாப்பிடும் போதுதான் வயிற்றில் ஜீரண 

நீர்கள் சுரக்கின்றன. வயிற்றில் நேரத்திற்கு 

அலாரம் வைத்துக்கொண்டு ஜீரண நீர்கள் 

சுரப்பதில்லை. அந்தந்த ரேத்திற்கு வருவதற்கு 

இது ஒன்றும் பேருந்தோ, ரயிலோ அல்ல. 

என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா, நேரா 

நேரத்திற்குச் சுரப்பதற்கு அங்கு எந்த விதமான 

ஏற்பாடும் கிடையாது. மனித உடலானது 

முற்றிலும் உணர்வுகளால் ஆனது. உணர்வுகளே 

மனித உடலை வேலை செய்யத் 

தூண்டுகின்றன, 


வேலையை முடிக்கவும் தூண்டுகின்றன. 

செயல்படுத்தவும் வைக்கின்றன. நேரத்திற்கு 

ஜீரண நீர் சுரந்து விடும். அப்போது வயிற்றில் 

சாப்பாடு இல்லையென்னறால் அல்சர் புண் 

வந்துவிடும் என்பது போன்ற காமெடி வேறு 

எதுவும் இல்லை.


நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் 

வருகிறதென்றால், இந்தியாவில் 

பெரும்பாலான 


ஏழை மக்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் 


அல்சர் வந்திருக்க வேண்டுமே! பெரும்பாலும் 

அல்சர் வருவது மூன்று வேளையும் நன்கு 

சாப்பிடுபவர்களுக்கே என்பதைக் கவனியுங்கள்.


நீங்கள் பசிக்காமல் மூன்று வேலையும் 

சாப்பிடும் போது, ஜீரண நீர்கள் சுரக்காத 

நிலையில் வயிற்றில் இருக்கும் உணவு 

அங்கேயே தங்கி, புளித்து, கெட்டு, கெட்ட 


வாயுக்கள் உருவாகத் துணை புரிகிறது. 

தினம்தோறும் இதுபோன்ற செயல் தொடர்ந்து 


நடைபெறும்போது, கெட்டுப் போன உணவு 
விஷமாக மாறுகிறது. பாத்திரத்தில் வைத்த 
உணவு எப்படி விஷமாக மாறுகிறதோ.... அப்படி 
விஷமாக மாறிய உணவு, உங்கள் வயிற்றில் 
அல்சரை (புண்களை) உருவாக்குகிறது என்பதை 
உணர்ந்துகொள்ளுங்கள்.

ஜீரணம் கெட்டால்தான் அல்சர் வருமே ஒழிய, 

ஜீரணிப்பதற்கு அங்கு ஒன்றுமே இல்லாத போது 

அல்சர் வராது. சாப்பிடாமல் இருந்தால் உடல் 

சோர்வடைந்து, சத்துக் குறைபாடு ஏற்பட்டு, அது 

சம்பந்தமாக நோய்கள் வேண்டுமானால் 

வரலாம்.

அல்சர் வயிற்றில் மட்டுமல்லாமல், உடலின் 

எந்தப் பாகத்தில் வேண்டுமானாலும் 

தோன்றலாம். நாட்பட்டு வெளியேற முடியாமல் 

தேங்கும் கழிவுகள் அந்த இடத்தில் பாதிப்பை 

ஏற்படுத்துகின்றன. பாதிக்கப்பட்ட அந்த 

இடத்தில் புண்கள் உருவாகின்றன. அதையே 

அல்சர் என்கிறோம். அல்சர் என்ற புண்கள் 

குணமாக வேண்டுமானால், தேங்கியுள்ள் 

கழிவுகளை முதலில் வெளியேற்ற வேண்டும். 

கழிவுகள் வெளியேறாவிட்டால் மீண்டும் 

மீண்டும் அல்சர் வந்துகொண்டே தான் இருக்கும்.


அல்சர் வந்துவிட்டால் உங்கள் உடலில் 
கழிவுகளின் தேக்கம் நிறைய உள்ளது என்பதை 
அறிந்துகொள்ளுங்கள்.