ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

மனித உடல்.அதிசயங்கள் ..!







அதிசயங்கள் நிறைந்த மனித உடல்...!


மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும் போது 


அவருடைய உயரம் 8 mm அதிகரிக்கும், தூங்கி 

எழுந்தபிறகு மீண்டும் பழைய உயரமே 

இருப்பார்.


இதற்கு காரணம் மனிதன் உட்காரும்போது 


அல்லது நிற்கும் போது புவி ஈர்ப்பு விசையின் 

காரணமாக எலும்புகளின் மீது ஏற்படும் 

அழுத்தமாகும்.


ரத்த நாளங்கள், செல்கள்


1. நமது உடல் எடையில் 14 சதவிகிதம் 

எலும்புகளால் ஆனது, 7 சதவிகிதம் ரத்தம் 

ஆகும்.


2. நுரையீரலில் 300,00 மில்லியன் ரத்த 

நாளங்கள் 

உள்ளன. இவை அனைத்தும் ஒன்று 

சேர்க்கப்பட்டால் அதன் நீளம் 2400 

கிலோமீட்டராக இருக்கும்.


3. ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் 

வடிகட்டிகளை(Filters) கொண்டுள்ளது. 

அவைகள் 

ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை 

வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் 

சிறுநீரை வெளியேற்றுகிறது.




4. மனிதனின் ஒரு தனித்த ரத்த அணு, உடல் 

முழுவதையும் சுற்றிவர 60 வினாடிகள் மட்டுமே 

எடுத்துக் கொள்ளும்.


5. மனித உடலின் மிகப்பெரிய செல் பெண்ணின் 


கருமுட்டையாகும், மிகச்சிறிய செல் ஆணின் 

விந்தாகும்.


6. நமது உடலில் உள்ள ரத்தக் குழாய்களின் 


நீளம் 

சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த 

தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை 

சுற்றி வந்துவிடலாம்.தசை


1. கண்களின் தசையானது ஒருநாளில் 100,000 


முறை அசைகிறது, அதற்கு சமமான 

வேலையை 

உங்கள் கால்களுக்கு கொடுக்க வேண்டும் 

என்றால் தினமும் 80 கிலோமீட்டர் தூரம் நடக்க 

வேண்டும்.



2. மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் 

பயன்படுத்தப்படுகின்றன.


கால்கள்


1. காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளை 


கொண்டிருக்கும்,ஆனால் மற்ற விரல்கள் 

ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளை 

கொண்டிருக்கும்.

2. கட்டை விரலின் நீளமும், மூக்கின் நீளமும் 

சமமாகும்.


3. மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் 


வரையிலான பக்டீரியாக்கள் இருக்கும்.

கண்கள்


நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம், 500 


விதமாக ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.



மூளை



1. மனித மூளையில் சுமார் 100 பில்லியன் நரம்பு 

செல்கள் உள்ளன, 35 வயது அடைந்தது முதல் 

மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் 

இறக்கின்றன.


2. நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்சிஜனில் 20 


சதவிகிதம் மூளைக்கு செல்கிறது.


3. நமது மூளை 80 சதவிகிதம் நீரால் ஆனது, 

மூளையின் செயல்திறன் பகலை விட இரவில் 

அதிகமாக இருக்கும்.


இறப்பு


மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் 


இழக்கும் நேரம்

கண்கள்- 31 நிமிடங்கள்


மூளை- 10 நிமிடங்கள்


கால்கள்- 4 மணிநேரம்


தசைகள்- 5 நாட்கள்


இதயம்- சில நிமிடங்கள்

சனி, 26 ஏப்ரல், 2014

தேங்காய் சத்து



தேங்காய்: சத்துப் பட்டியல்:-

தேங்காய் சேர்க்காத குழம்பு வகைகள் தமிழகத்தில் குறைவு. அதில் இருந்தே தேங்காயின் பெருமையை புரிந்து கொள்ளலாம். தென்னை மரத்தின் கனிதான் தேங்காய் என்றாலும் அது பருப்பு வகையோடு பிரித்து அறியப்படுகிறது. இதில் அடங்கிய சத்துக்களின் விவரத்தை அறியலாம்... 

* தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிக ஆற்றல் வழங்கக்கூடியது. வைட்டமின்கள், தாதுக்கள் மிகுதியாக கிடைப்பதால் முழு உணவாகவே தேங்காயைச் சாப்பிடலாம்.

* சராசரியாக 400 கிராம் உள்ள தேங்காயை சாப்பிட்டு தண்ணீர் பருகினால், மாமிசம் உண்பதற்கு நிகரான ஆற்றல் கிடைக்கும். அதாவது அன்றைய தினத்திற்கு உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள், வைட்டமின்கள் 
மற்றும் ஆற்றலை உடலுக்கு வழங்கிவிடும். 


* அதிக அளவில் கொழுப்புச்சத்தும், புரதச்சத்தும் தேங்காயில் நிறைந்துள்ளது. 100 கிராம் தேங்காய் பருப்பு 354 கலோரிகள் ஆற்றல் வழங்கக்கூடியது. மற்ற பருப்பு, கொட்டை வகைகளைவிட அதிக அளவில் பூரிதமாகும் கொழுப்புகளைக் கொண்டுள்ளது. 

* 'லாவுரிக் ஆசிட்' எனும் கொழுப்பு அமிலம் தேங்காயில் உள்ளது. இது ரத்தத்தில் உடலுக்கு அவசியமான எச்.டி.எல். வகை கொழுப்புகளை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்கிறது. எச்.டி.எல். கொழுப்புகள் ரத்தத்தை எடுத்துச் செல்லும் கரோனரி தமனியில் தடை ஏற்படுவதை தடுக்கும் ஆற்றலுடையது. 

* தேங்காய் தண்ணீர், கோடைக்கு உகந்த புத்துணர்ச்சி பானமாகும். இதில் ஒற்றைச் சர்க்கரை, எலக்ட்ரோலைட்டுகள், தாது உப்புக்கள் மற்றும் சைட்டோகைனைன் போன்ற பல உடல் செயற்காரணிகள் உள்ளன. பாஸ்படேஸ், கேட்டலேஸ், டீகைட்ரோஜனேஸ், பெராக்சைடேஸ், பாலிமரேஸ் போன்ற நொதிக் காரணிகளும் தேங்காய் நீரில் உள்ளன. இவை ஜீரணம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில் பங்கெடுக்கும் நொதிகளாகும். 

* தேங்காய் எண்ணை சமைப்பதிலும், கூந்தல் உறுதிக்கும், வேறுபல மருந்து தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. * தேங்காய் நீரில் உள்ள சைட்டோகைனைன், முது மையை தடுக்கும் ஆற்றல் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ரத்தக் கட்டிகள் மற்றும் புற்றுக் கட்டிகளுக்கு எதிராக செயல்படும் ஆற்றல் கொண்டது. 

* தேங்காய் பருப்பில் தாமிரம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு, மக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் உள்ளன. 

* பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான போலேட், ரிபோ பிளேவின், நியாசின், தயாமின், பைரிடாக்சின் போன்ற வையும் சிறந்த அளவில் காணப்படுகிறது. இவை உடல் உள்ளுறுப்புகள் இயக்கத்திற்கும், உடல் புத்துணர்ச்சிக்கும் அவசியமானவையாகும். 

* தேங்காய் பருப்பை அப்படியே சாப்பிடலாம். 

* வாழை, பலா, தேன், சர்க்கரை ஆகியவற்றுடன் தேங்காயை பூவாகத் துருவி கலந்து புதுருசியில் சுவைக்கலாம்.

நச்சு கடி சித்த மருத்துவம்.....




அனைவரும் இதை பகிரவும் 

சித்த மருத்துவம்.....

கடிகளைக் கண்டறிதல்...

இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம்.

இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால்......

இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும்..

புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும்...

வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு, நீர் பிரட்டை போன்றவை என்றும்...
கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் அறிந்து உணரலாம்...


தேள் கடி மருந்துகள்:-

எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும்.

கடிவாயில் எலுமிச்சைப் பழ இரசத்தையும் உப்பையும் கலந்து தடவினால் நலம் கொடுக்கும். 

கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும்.

சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும்கண்ணாடி இலையின் பால் எடுத்துத் தேள் கடித்த இடத்தில் வைத்தால் நஞ்சு இறங்கும்.

பட்டு ரோஜா (டேபிள் ரோஜா) செடியின் இலையின் நான்கை எடுத்து வெற்றிலையில் மடித்துத் தின்றால் நஞ்சு இறங்கும்.

குப்பை மேனி இலையைப் பறித்து நன்றாக நீரில் கழுவி விட்டுப் பின்பு கசக்கிச் சாறு எடுத்துத் தேள் கடித்த இடத்தில் தடவ வேண்டும். அத்துடன் கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும்.

ஒற்றை மருத்துவம்:-

சித்த மருத்துவத்தில் ஒரு பொருளை மட்டும் மருந்தாகப் பயன்படுத்தும் முறைக்கு ஒற்றை மருத்துவம் என்று பெயர்.

நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றால் உடன் நஞ்சு நீங்கும்.

பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும். 

வெறி நாய்க்கடி மருந்து:-

வெறி நாய் கடித்து விட்டால், நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும். 

பாம்புக்கடி மருந்து:-

பாம்பு கடித்து விட்டால் உடன் வாழை மரம் ஒன்றை அடியிலும் நுனியிலும் வெட்டி ஆறு அடி நீளத் துண்டிட்டுக் கொண்டு வரவேண்டும்.

பாம்புக்கடி பட்டவன் பல் கட்டி வாய் திறக்க முடியாமலிருப்பான். அதனால் வாழைப்பட்டையை உரித்துப் பாயாகப் பரப்பிக் கடிபட்டவனை அதில் படுக்க வைக்க வேண்டும்.பின் வாழைப்பட்டைச் சாறு 1 லிட்டர் பிழிய வேண்டும்.

சாறு பிழிவதற்குள் வாழைப்பட்டையில் படுக்க வைத்தவன் பல் கட்டு நீங்கி வாய் இயல்பாகத் திறக்கும்.

உடன் ஒரு லிட்டர் வாழைப்பட்டைச் சாறையும் பாம்புக் கடிபட்டவனைக் குடிக்கச் செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் பாம்புக் கடிபட்டவன் நஞ்சு நீங்கி எழுந்து நடப்பான். 

நஞ்சு முறிப்பு:-

எலி, பெருச்சாளி, மூஞ்சுறு, தேள், பூரான் போன்றவைகளின் நஞ்சை நீக்க, நாயுருவியின் விதையை வீசும் படி எடுத்து வெய்யலில் காய வைத்துப் பொடி செய்ய வேண்டும்.இந்தப் பொடியை நல்ல மூடியுள்ள பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். நஞ்சு நீங்கத் தேவையான காலத்தில் இந்தப் பொடியில் மூக்குப் பொடி அளவு எடுத்துத் தேனில் குழைத்துக் காலையிலும், மாலையிலும் 25 நாட்கள் சாப்பிட வேண்டும். இப்படிச் சாப்பிட்டால் நஞ்சு நீங்கும். 

உடலுக்குள் சென்ற எந்த நஞ்சாக இருந்தாலும் வாந்தி ஏற்படுத்துவதன் மூலம் நஞ்சை வெளியேற்றலாம்.

வாந்தி ஏற்படுத்துவதற்கு நஞ்சிலைப் பறிச்சான் என்ற செடியின் வேருடன், தலைச்சுருளி என்ற பெரு மருந்து இலையைச் சேர்த்து நன்றாக அரைத்து எலுமிச்சைப்பழம் அளவு உருண்டை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் உடனே வாந்தி ஏற்பட்டு அனைத்து நஞ்சும் அதன் மூலம் வெளியேறிவிடும்.

வாந்தி ஏற்பட்ட பின்பு எலுமிச்சைப் பழத்தைத் தண்ணீரில் பிழிந்து குடித்து விட்டால் நஞ்சு முறிந்து போகும். 

சித்த மருத்துவம் ஏராளமான மூலிகைகளை நமக்குக் கூறுகின்றது.நஞ்சு நீக்கத்திற்கு மட்டுமன்றி, மனிதனின் அகப்புற உறுப்புக்களைத் தாக்கும் எல்லாவிதமான சிறு, பெரு நோய்களுக்கும் மருந்துண்டு.

ஆனால் சித்த மருத்துவத்தின் பயன்பாடு தான் இப்போது குறைந்து வருகிறது.

அல்சரை விரட்டும் அமுத பானம் இளநீர்



அல்சரை விரட்டும் அமுத பானம் இளநீர்,,,

உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன் எனப்பாடினார் திருமூலர். வாழ்க்கை வாழ்வதற்கு உண்ண உணவும், உடுத்த உடையும், வாழ இருப்பிடமும் அவசியம். இதில் உண்ணும் உணவு சுகாதாரமானதாக இருக்கவேண்டும். நேரத்திற்கு ஏற்றவாறு உண்பது அவசியம். ஆனால் இன்றைய நவீன யுகத்தில் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட முடிகிறதா? என்றால் கேள்விக்குறிதான்.

பெருநகரங்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் அல்லது பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் காலை நேரங்களில் உணவை அவசர அவசரமாகவும், வெந்தும் வேகாமலும், சுவையோ அல்லது சுகாதாரத்தைப்பற்றியோ யோசிக்காமல் அரைகுறை வயிற்றுடன் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் அல்லது பள்ளிக்கு செல்வோரை நாம் காண்கிறோம். அதேபோல் மதிய நேரத்திலோ அல்லது இரவிலோ சரியான நேரத்திற்கு போதிய அளவு உணவு சாப்பிடுவோரின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு.


காரணம் அவர்கள் உணவுக்கு பதிலாக அடிக்கடி டீ, காபி, நொறுக்கு தீனி, பாஸ்ட்புட் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. இது நாளடைவில் பல பிரச்னைகளுக்கு அடித்தளமாக அமைந்து விடுகிறது. இதன் விளைவு வயிற்றுப்புண் ஏற்பட்டு அல்சரில் கொண்டு சேர்க்கிறது. அல்சர் நமது உடலில் உள்ள சிறுகுடலில் ஏற்படும் பாதிப்பு. நேரம் தவறி சாப்பிடுவது, நீண்டநேரம் சாப்பிடாமல் இருப்பது, அதிக காரமான திண்பண்டங்களை சாப்பிடுவது போன்ற பல காரணங்களால் அல்சர் உருவாகிறது. அல்சர் இருந்தால் சாப்பிடும்போது வயிற்றில் எரிச்சல், நெஞ்சு எரிச்சல், குமட்டல், வாந்தி உள்ளிட்டவைகள் ஏற்படும்.

வயிற்று புண் இருப்பவர்கள் சாக்லெட், குளிர்பானங்கள், மது, பெப்பர்மிட், காபி, கருப்பு தேனீர், ஆரஞ்சு, திராட்சை, பூண்டு, மிளகாய்பால் உணவுகள், காரம், வெங்காயம், தக்காளி விழுது, தக்காளி பொருட்கள் உள்ளிட்டவற்றை தவிர்க்கவேண்டும். அதற்கு பதிலாக கோதுமை, கோழி, மீன், பீன்ஸ், முட்டை, தயிர், அத்திப்பழம் உள்ளிட்டவற்றை கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு குறைவாக சேர்த்து சாப்பிடலாம். அதேபோல் புளிப்பான பழங்கள் மற்றும் காரமான உணவுகளையும் தவிர்ப்பது அவசியம்.

இலைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவை நாம் சாப்பிட தொடங்கும் வரை சுவாசித்துக்கொண்டிருக்கின்றன. அதனால்தான் காற்றுப்புகாத பைகளில் கட்டிவைத்தால் அவை அழுகிவிடும். எனவே அவற்றை உயிருள்ள உணவு என்கிறோம். அந்த உயிர்சத்துதான் நம் உடலில் உண்டாகும் அல்சர் போன்ற பிரச்னைகளை தடுக்கும் அருமருந்தாக பயன்படுகிறது. அல்சரை போக்கும் சக்தி தேங்காய்க்கும் உண்டு.
தேங்காயில் உள்ள நீர், இளங்காயாக இருக்கும்போது அதில் இருக்கும் மெல்லிய வழுவழுப்பான பொருள் நம் உடலில் உண்டாகும் நோயை தடுக்கும் இயற்கை மருந்தாக பயன்படுகிறது. இதனை தினமும் காலை, மாலை என இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் சூட்டை தணிக்கும், கண்கள் குளிர்ச்சி பெறும், பட்டினி, அதிக உணவு சாப்பிட்ட பிறகு ஜீரணமாகவும், அஜீரண கோளாறு ஆகியவற்றை போக்குவதில் இளநீர்முக்கிய பங்கு வகிக்கிறது.

இளநீரை தினமும் மதியநேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தி, ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீரை வெளியேற்றுவதுடன், ரத்த சோகையை போக்குகிறது. எனவே நோயற்ற வாழ்க்கைக்கு உகந்த உணவை சரியான முறையில் சரியான அளவு சாப்பிட்டால் அல்சர் பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம். முடிந்தவரை காரமான மற்றும் பாஸ்ட்புட் மற்றும் நொறுக்கு தீனிகளை குறைத்துக்கொண்டால் அல்சருக்கு எளிதில் ‘குட்-பை சொல்லலாம்.