ஞாயிறு, 25 ஜனவரி, 2015

30 வயதில் செய்ய வேண்டிய சோதனைகள்

30 வயதில் செய்ய வேண்டிய சோதனைகள் 



நீங்கள் 30 வயதை நெருங்கி கொண்டிருப்பவரா.....?
அப்படியானால் 30 வயதை தொடும் முன் நீங்கள் செய்ய வேண்டியது ஒரு பெரிய பட்டியலே உள்ளது. இவை எல்லாம் நேரமே இல்லாமல் இருந்திருக்கும். விடுமுறை எடுப்பது, நடனம் கற்பது, வானத்தில் பறப்பது. கடைசியாக மருத்துவ பரிசோதனையும் கூட, ஆனால் மருத்துவ சோதனை என்று வரும் போது, எந்த சோதனைகளை எல்லாம் செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாது. கவலை வேண்டாம் – 30 வயதில் எடுக்க வேண்டிய மருத்துவ பரிசோதனைகள் பற்றி மருத்துவர்கள் த்வனிகா கபாடியா மற்றும் பிரகாஷ் லுல்லு நமக்கு விவரமாக கூறியுள்ளார்கள்.
சுவாரஸ்யமான வேறு: கூச்சப்படாம வீட்டுக்குள்ள ‘சும்மா’ சுத்துங்க.. உடம்புக்கு ரொம்ப நல்லதாம்!
அடிப்படை இரத்த சோதனை
-----------------------------------------
அனைவரும் தங்களின் உடலில் உள்ள இரத்தத்தின் எண்ணிக்கை, ஹீமோகுளோபின் அளவு மற்றும் இரத்த வெண் செல்லெண்ணிக்கை போன்றவைகளை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். வைட்டமின் பி12 அல்லது டி3 போன்ற ஊட்டச்சத்து குறைபாடு ஏதேனும் இருந்தாலும் கூட, அதனை இரத்த சோதனை வெளிப்படுத்தும்.
இரத்த சர்க்கரை சோதனை
---------------------------------------
சர்க்கரை நோயை கண்டறிவதற்கு இரத்த சர்க்கரை சோதனை தேவைப்படும். அதிலும் ஹீமோகுளோபின் க்ளைகேஷனை (இரத்தத்தில் உள்ள பிளாஸ்மா குளுகோஸின் அடர்த்தியை தெரியப்படுத்தும்) சோதனை செய்யலாம். சர்க்கரை நோய் மற்றும் இதயகுழலிய நோய்களுடன் சம்பந்தப்பட்டது ஹீமோகுளோபின் க்ளைகேஷன்.
சிறுநீர் பரிசோதனை
------------------------------
உடலில் ஏதேனும் தொற்றுக்களை கண்டறிய சிறுநீர் பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லது.
யூரிக் அமில பரிசோதனை
--------------------------------------
மூட்டு வலி இருக்கும் போது இது முக்கியமாக தேவைப்படும். யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும் போது, இளவயது ஆண்களுக்கு கீல்வாதம் ஏற்படும்.
கல்லீரல் மற்றும் சிறுநீரக சோதனை
-----------------------------------------------------
இவைகள் ஒழுங்காக செயல்படுகிறதா என்பதை கண்டறிவதற்கு இந்த சோதனையாகும். உங்கள் உடலின் ஹார்மோன் அளவுகளும், என்சைம் செயல்பாடுகளும் சரியாக உள்ளதா என்பதையும் தெளிவுப்படுத்தும்.
க்ரியேடினைன் அளவுகளை சோதித்தல்
----------------------------------------------------------
உங்கள் சிறுநீரகம் ஒழுங்காக செயல்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள இந்த சோதனை தேவைப்படுகிறது. அதற்கு க்ரியேடினைன் சோதனையை மேற்கொள்ள வேண்டும். இதுவும் ஒருவகையான இரத்த பரிசோதனை தான்.
கொழுப்பு சோதனை/ஈசிஜி
--------------------------------------
“நீங்கள் உடல்ரீதியாக அதிக வேலை பார்ப்பதில்லை என்றால், கொழுப்பு சோதனையை மேற்கொள்ளுங்கள்” என்று டாக்டர் கபாடியா கூறுகிறார். ட்ரைகிளைசெரைட்ஸ் மற்றும் கொலஸ்ட்ராலை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், வருங்காலத்தில் ஏற்படும் இதய சம்பந்த பிரச்சனைகளில் இருந்து தப்பலாம். அளவுக்கு அதிகமான சோர்வு, வியர்த்து கொட்டுதல், பதற்றம் மற்றும் நெஞ்சு வலி போன்ற பிரச்சனைகள் இருந்தால் தான் ஈசிஜி (எக்கோ கார்டியிக்ராம்) சோதனை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறுகிறார். எனவே வருங்காலத்தை மனதில் வைத்து செய்யப்படுவது இந்த சோதனை.
பொதுவான உடல் பரிசோதனை
-----------------------------------------------
இரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை போன்ற பிற முக்கியமானவைகளையும் சோதித்து கொள்ள வேண்டும்.
தைராய்டு சோதனை
------------------------------
பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனை தான் தைராய்டு. தைராய்டு பிரச்சனை அல்லது தைராய்டு நோய் என்பது போதுமான ஹார்மோன்களை தைராய்டு சுரப்பிகள் சுரக்கவில்லை என்றால் உண்டாகும். இதனால் அளவுக்கு அதிகமான உடல் பருமன் அல்லது மெலிதல் உண்டாகும். அதனால் கீழ்கூறிய அறிகுறிகள் தென்பட்டால் அதற்கான சோதனையை மேற்கொள்ளுங்கள். அவையாவன
மிகுதியான சோர்வு, உடல் பருமன், உடல் எடை குறைதல்.
சோனோகிராஃபி
-------------------------
சோனோகிராஃபி செய்து கொண்டால் உங்கள் கல்லீரல், சிறுநீரகம், சினைப்பை மற்றும் கர்ப்பப்பை சீராக செயல்படுகிறது என்பதை தெரியப்படுத்தும். உங்கள் உடலில் உள்ள அனைத்து என்சைம்களும் ஒழுங்காக செயல்படுகிறதா என்பதையும் தெரியப்படுத்தும். பாலிசிஸ்டிக் ஒவேரி சிண்ட்ரோம் (PCOD) அல்லது கர்ப்பப்பை கட்டி உண்டாவதையும் வெளிக்காட்டும்.
காய்கறிகள் அதிகமாகவும், அரிசி சாதத்தைத் தொட்டுக் கொள்கிற மாதிரியும் எடுத்துக் கொள்வதுதான் சிறந்தது.
நொறுக்குத்தீனி என்கிற பெயரில் குழந்தைகளுக்குக் கண்ட உணவுகளையும் கொடுப்பதற்குப் பதில், அரிசி மாவில் செய்த புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை போன்றவற்றை கொடுக்கலாம்.
அவல் பாயசம், சிகப்பரிசி புட்டு, கொழுக்கட்டை போன்றவை மாலை நேரத்தில் குழந்தைகளுக்கேற்ற சிறந்த உணவுகள்.

செவ்வாய், 6 ஜனவரி, 2015

Blood Group DIETS



உங்களது ரத்த வகை எது? அதற்கேற்ற உணவு 


எது?

இந்த பதிவின் நோக்கம், சைவ உணவின் 


முக்கியத்துவம் குறித்து தான். உலகம் 

முழுவதிலும் அசைவ உணவுக்கு மாற்றான 

இயக்கங்கள் எழுந்து வருகின்றன. 

காரணம்,மனித பரிணாம வளர்ச்சியில் அவனது 

இயற்கை உணவு என்பது தாவரங்கள் மட்டுமே. 

இறைச்சி என்பது விலங்கு உலகத்திற்கு 

படைக்கப்பட்டது. இதில் எது சரி. எது தவறு 

என்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. 

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.சைவ உணவு 

மட்டுமே மனிதனுக்கு பொருந்திய உணவு 

என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.


காய்கறிகள் என்ற மரக்கறிகள் எளிதில் செரிக்க 


கூடியது. மனித உடலின் இயங்கு 

மண்டலத்திற்கு தேவையான சக்திகள் 

அனைத்தும் சைவ உணவில் அதிகமாகவே 

இருக்கின்றன. இவை மட்டுமே மனித உடலின் 

செரிமான மண்டலத்திற்கு பொருந்தி போக 

கூடியவையும் கூட. இருந்தாலும் சில 

நேரங்களில் மாமிச உணவும் பொருந்தி தான் 

போகிறது. ஆனால் அளவோடு உண்டால் அது 

மருந்தாக அமைகிறது.


சரி, எந்த இரத்த வகையினருக்கு எந்த 


மாதிரியான உணவு முறை பொருந்து என்று 

பார்க்கலாம். அதாவது, இரத்தத்தின் வகை 

என்பது கார, அமில நிலைப்பாடுகளை 

பொருத்து 

அமைகிறது. செவ்வாய் தோஷம் உள்ள 

பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ள ஆண் 

தான் பொருத்தமாக இருக்கும் 

என்பார்களே..அது 

ஏன்? இரத்தத்தின் தன்மையை வைத்துதான் 

இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்பது 

தான் 

உண்மை.



ஆக..இரத்தத்தின் தன்மைக்கு ஏற்றபடி அமில, 

காரத்தன்மையுள்ள உணவு வகைகளை 

உண்டால் அது நமது செயல் திறனை 

அதிகரிக்கும். ஆரோக்கியமான உடலை தரும். 

இந்த பதிவில் எந்த இரத்த வகை 

கொண்டவர்களுக்கு என்ன மாதிரியான 

உணவுகள் பொருந்தும் என்று பார்க்கலாம்.



'ஏ' பிரிவு இரத்த வகை

இவர்களுக்கு சைவ உணவு மட்டுமே 

பொருத்தமானது. புத்தம் புதிய காய்கறிகள்,கீரை 

வகைகளை இவர்கள் அதிகமாக உணவில் 

சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ் மற்றும் 

பயறுவகைகளில் அதிகமான புரதச்சத்து 

உள்ளது. அவை இவர்களுக்கு இதய நோய்கள், 

புற்றுநோய்,நீரிழிவு போன்றவை ஏற்படுவதை 

ஓரளவு தடுக்கும். 'ஏ' இரத்த பிரிவு 

கொண்டவர்களுக்கு மேற்கண்ட நோய்கள் 

ஏற்படும் சூழ்நிலை அதிகம் இருப்பதாக 

சொல்லப்படுகிறது. இந்த இரத்த வகை 

கொண்டவர்கள் பால் மற்றும் பால் சார்ந்த 

பொருட்களை தவிர்ப்பது நலம். இவை 

இவர்களுக்கு எளிதில் சீரணம் ஆவதில்லை. 

முட்டைக்கோஸ், தக்காளி, 

உருளைக்கிழங்கு,மிளகு போன்றவற்றில் 

இருக்கும் 'லெக்டின்' என்ற பொருள் இவர்களின் 

வயிற்றுக்கு தொந்தரவை தரும்.


'பி' இரத்த வகை

மிதமான மென்மையான உணவுகளே இந்த 

வகை இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு 

ஏற்றவை. பழம், காய்கறிகளை இவர்கள் 

அதிகமாக சாப்பிடலாம். பாலும், பால்வகை 

பொருட்களும் உடலுக்கு உகந்தவை அல்ல. 

தக்காளி அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுக் 

கோளாறுகளை உருவாக்கும். சோளம், 

கோதுமை,பயறு வகைகள்,வேர்க்கடலை 

சாப்பிட்டால் இவர்களின் உடல் எடை 

அதிகரிக்கும். இவற்றில் இருக்கும் சில 

ரசாயனங்கள் இந்த ரத்த பிரிவுகாரர்களுக்கு 

மந்தம், சோர்வை உருவாக்கும்.


'ஏ'பி' பிரிவு இரத்த வகை


இந்த பிரிவு இரத்தம் இருப்பவர்கள் இறைச்சி 

உணவை அதிகம் உண்பது கூடாது. இவர்களது 

வயிற்றில் உணவை சீரணம் செய்யும் 

அமிலச்சுரப்பு குறைவாக இருப்பதுண்டு. 

அதனால் சீரணம் மெதுவாக நடக்கும். குறிப்பாக 

இவர்கள் கோழி இறைச்சியை உண்பது கூடாது. 

பால், வேர்க்கடலை மற்றும் பருப்பு வகை 

பொருட்கள், தானியங்களை உணவில் சேர்த்துக் 

கொள்ளலாம். ஆனால் கோதுமையை அதிகம் 

சேர்க்க கூடாது. இந்த இரத்த பிரிவு 

கொண்டவர்களுக்கு அதிகமாக சளித் 

தொந்தரவு 

இருக்கும். காலையில் இளம் சுடுநீரில் பாதி 


எலுமிச்சை பழத்தை பிழிந்து வெறும் வயிற்றில் 

குடித்தால் சளி தொந்தரவு நீங்கும்.


'ஓ' இரத்த பிரிவு

இவர்கள் மாமிச உணவுகளை சாப்பிடலாம். 

ஆனால் அதைவிட அதிக நார்ச்சத்து நிறைந்த 

காய்கறிகளை சாப்பிடலாம், இயற்கையாக 

இவர்களின் வயிற்றில் சீரணத்திற்கு சுரக்கும் 

அமிலத்தின் அளவு அதிகமாக இருப்பதுண்டு. 

அதனால் செரிக்க சற்று கடினமான உணவுகளை 

எடுத்துக் கொண்டாலும் எளிதில் சீரணமாகி 

விடும். கோதுமை இவர்களுக்கு பொருந்தாது. 

காரணம், கோதுமையில் இருக்கும் ஒரு வகை 

ரசாயனம் இவர்களது உடலுக்கு 

பொருந்துவதில்லை. பால் பொருட்களும் 

பொருந்துவதில்லை. பீன்ஸ்,பயறு வகைகளும் 

இவர்களுக்கு எதிராக இருக்கின்றன. இவற்றை 

அதிகம் சாப்பிடும் நிலையில் மந்தமான குணம் 

காணப்படுவதுண்டு. அது போல் 

முட்டைகோஸ்,காலிபிளவர்,கடல் 

உயிரினங்கள்,அயோடின் சேர்நத உப்பு 

போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.


இந்த விடயங்கள் ஒரு வேதியியல் மற்றும் சித்த 


மருத்துவம் தெரிந்த நண்பரின் 

ஆலோசனையில் 

பதியப்பட்டது. இங்கு குறிப்பிட்ட 

உணவுப்பொருட்கள் உங்களுக்கு ஒத்து வராத 

ஒன்றாக நீங்கள் அறிந்தால் இங்கு 

குறிப்பிடப்படும் தகவலும் பொருந்துவதாகும். 

மற்ற படி இந்த தகவல் பொதுவானது என்பதை 

உங்கள் கவனத்திற்கு வைக்கிறேன். நன்றி

வெள்ளி, 2 ஜனவரி, 2015

நோய் அறிகுறிகள்






உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-
1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....?
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.
2. கண் இமைகளில் வலி.. என்ன வியாதி....?
அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.
டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
3. கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி...?
அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.
டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..
4. கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி...?
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.
டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.
5. தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி...?
இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.
டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.
6. முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி....?
உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.
டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.
7. தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி...?
கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.
டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.
8. பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென
உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி...?
சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.
டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.
9. பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி...?
நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
10. பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி...?
தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.
டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.
11. சிவந்த உள்ளங்கை என்ன வியாதி...?
கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.
டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.
12. வெளுத்த நகங்கள் என்ன வியாதி....?
இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!
ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.
டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரை வகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின் படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.
13. விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி...?
ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.
டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.
14. நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி...?
சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.
டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.
16. வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி....?
பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.
டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.
17. சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி....?
வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.
டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.
18. வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி....?
உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.
டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும். 

வியாழன், 1 ஜனவரி, 2015

வாய்ப்புண் தடுப்பது எப்படி?






வாய்ப்புண் வருவது ஏன்? தடுப்பது எப்படி?

வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும்; சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி அதிகமாகும். கழுத்தில் நெறிகட்டு
ம்; காய்ச்சல் வரும்; உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும்.

யாருக்கு வரும்?

குழந்தை முதல் முதியோர்வரை இது எல்லோருக்கும் வரலாம். பொதுவாக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு வாய்ப்புண் வரும் வாய்ப்பு அதிகம். அடுத்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் இதன் தாக்கம் அதிகம்.

தவிர வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடுபவர்கள், புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு அடிக்கடி வாய்ப்புண் வரலாம். எந்த நேரமும் வேலை, வேலை என்று பரபரப்பாக இருக்கிறவர்களுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் வாய்ப்புண் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கும்.

காரணம் என்ன?

நீண்ட நாட்களுக்குச் சரிவிகித உணவைச் சாப்பிடாதவர்களுக்கு இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6 மற்றும் பி12 குறைபாடு ஏற்படும். இதனால் ரத்த வெள்ளை அணுக்கள் குறைந்துவிடும். இதன் விளைவாக உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து வாய்ப்புண் வரும்.

ஆண்களைவிடப் பெண்களுக்கு இந்தத் தொல்லை அதிகம். காரணம், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. இதனால் இவர்களுக்கு வாய்ப்புண் வருகிறது. அடுத்து, இவர்கள் சாப்பிடும் கருத்தடை மாத்திரைகளும் வாய்ப்புண் ஏற்படக் காரணமாகின்றன.

வாய்ப்புண் வருவதற்கு ஒவ்வாமையும் முக்கியக் காரணம்தான். உணவு ஒவ்வாமை - குறிப்பாகச் செயற்கை வண்ண உணவுகள் - மருந்து ஒவ்வாமை, பற்பசை ஒவ்வாமை போன்றவற்றை உதாரணங்களாகக் கூறலாம். அதிகமாகக் கவலைப்பட்டாலும் வாய்ப்புண் வரும். உதாரணம், மாணவர்களுக்குத் தேர்வு நேரங்களில் மன அழுத்தம் அதிகரிப்பதால் வாய்ப்புண் வருவது.

வைட்டமின் பி2 குறைபாடு இருந்தால், வாயின் இரண்டு ஓரங்களிலும் வெள்ளை நிறத்தில் வெடிப்புகள் தோன்றும். இரைப்பையில் புண் உள்ளோருக்கு, அங்கே சுரக்கிற அதீத அமிலம் தூக்கத்தில் உணவுக்குழாயைக் கடந்து வாய்க்கு வந்துவிடும். அப்போது தொண்டையிலும் வாயிலும் புண் ஏற்படும்.

கூர்மையான பற்கள் இருந்தால், அவை உள் கன்னத்தைக் குத்தி, புண்ணை உண்டாக்கும். கவனக்குறைவாகச் சாப்பிடும்போது கன்னம் கடிபட்டு வாய்ப்புண் ஏற்படலாம். பல் துலக்கும்போது பிரஷ் குத்துவதால் புண் உண்டாகலாம். செயற்கைப் பற்கள் சரியாகப் பொருந்தவில்லை என்றால், அடிக்கடி வாய்ப்புண் வரும். மிகச் சூடாக காபி/டீ குடித்தால்கூட வாய்ப்புண் வருவதுண்டு. சிலர் வாயின் ஒரு பக்கத்தில் மட்டுமே உணவை மெல்லுவார்கள். இது நாளடைவில் வாய்ப்புண்ணுக்கு வழியமைக்கும்.

கிருமிகளின் தாக்குதல்!

பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளின் தாக்குதல் காரணமாக வரும் கிரந்தி நோய், வின்சன்ட் நோய், சின்னம்மை, தட்டம்மை, வாயம்மை, எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படும்போது வாயில் புண் வருவது வழக்கம்.‘கான்டிடா ஆல்பிகன்ஸ்' (Candida albicans) எனும் பூஞ்சைக் கிருமிகளின் பாதிப்பால் நாக்கில் ‘கட்டித் தயிர்’ போல வெண்படலம் உருவாகிப் புண் ஏற்படும். அடிக்கடி ‘ஆன்ட்டிபயாட்டிக்’ மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும் அஜீரணக் கோளாறு இருப்பவர்களுக்கும், இது நிரந்தரத் தொந்தரவாகிவிடும். பல் ஈறு கோளாறுகள், சில மருந்துகளின் பக்கவிளைவு காரணமாகவும் வாய்ப்புண் வருவதுண்டு.

என்ன சிகிச்சை?

பெரும்பாலான வாய்ப்புண்கள் சரியான உணவு மூலமே குணமாகி விடும். அதேநேரத்தில், வாய்ப்புண் வெகு நாட்களுக்கு ஆறாமல் இருந்தால், அது புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு. ஆகவே வாய்ப்புண்தானே என்று அலட்சியமாக இருக்காமல், காரணம் அறிந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

மருத்துவரின் ஆலோசனைப்படி ஆன்ட்டிசெப்டிக் திரவத்தைப் பயன்படுத்தி வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் சீக்கிரத்தில் குணமாகும். ஸ்டீராய்டு மற்றும் வலி மரத்துப் போகச் செய்யும் களிம்புகளை வாய்ப்புண்ணில் தடவலாம். இவற்றோடு வலி நிவாரணி மாத்திரைகளையும் ஒரு வாரம் சாப்பிட வேண்டும். லாக்டோபேசில்லஸ் (Lactobacillus) மருந்து கலந்த மல்ட்டி வைட்டமின் மாத்திரை மற்றும் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மாத்திரைகளை ஒரு மாதம் சாப்பிட வேண்டும். அப்போதுதான் வாய்ப்புண் மீண்டும் வராது. பூஞ்சையால் வரும் வாய்ப்புண்ணுக்குக் காளான் கொல்லி மருந்தைத் தடவினால் நல்ல பலன் கிட்டும்.

தடுப்பது எப்படி?

வாய்ச்சுத்தம் காப்பது வாய்ப்புண்ணைத் தடுப்பதற்கான முதல் படி. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் காண்பித்து ‘ஸ்கேலிங்’ முறையில் பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் கூரான பற்களைச் சரி செய்ய வேண்டும். செயற்கைப் பல்செட்டால் பிரச்சினை வருகிறது என்றால், அதை மாற்றிவிடுவது நல்லது. ‘சோடியம் லாரில் சல்பேட்’(Sodium lauryl sulphate) கலந்திருக்கும் பற்பசையைப் பயன்படுத்தக் கூடாது. புகை பிடிக்கக் கூடாது. வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடக் கூடாது. மது ஆகாது. நீரிழிவு நோயாளிகள் நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவு ஒவ்வாமை/மருந்து ஒவ்வாமை இருந்தால் தவிர்க்க வேண்டும்.

எந்த உணவு முக்கியம்?

பால், தயிர், முட்டை, இறைச்சி, ஈரல், மீன், நண்டு, கீரை, பச்சையிலைக் காய்கள், வெல்லம், தேன், பேரீச்சை, முளை கட்டிய பயறுகள், கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி, கோதுமை, கேழ்வரகு, சோயாபீன்ஸ், தக்காளி, முருங்கைக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டால் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக வாய்ப்புண் ஏற்படுவதை நிச்சயம் தடுக்கலாம்.